மேட்டூர் அணைக்கு 73 வயசு!

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்:

மேட்டூர் அணை கட்டப்பட்டு இன்றுடன் 72 ஆண்டுகள் முடிவடைந்து 73வது ஆண்டுபிறக்கிறது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் காவிரி நீரைத் தேக்கி வைப்பதற்காக மேட்டூரில்அணை கட்டமுடிவு செய்யப்பட்டது. கடந்த 1925ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம்தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆங்கிலேய பொறியாளர் எல்லிஸ் மற்றும் இந்திய பொறியாளர் ராவ்பகதூர்வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலையில் 27 பொறியாளர்கள் தலைமையில்ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட9 ஆண்டுகள் கட்டுமானப் பணி நடந்தது.

1934ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி அணை கட்டி முடிக்கப்பட்டது. அப்போதையஆளுனர் சர் பிரடெரிக் ஸ்டான்லி அணையைத் திறந்து வைத்தார். இதனால்தான்மேட்டூர் அணைக்கு ஸ்டான்லியின் பெயர் சூட்டப்பட்டது.

மேட்டூர் அணையின் உயரம் 214 அடி. இதில்120 அடி வரை தண்ணீரை சேமித்துவைக்கலாம். இதன் நீர்ப்பிடிப்புப் பகுதி 16,300 சதுர மைல் ஆகும். கடந்த 72ஆண்டுகளில் மொத்தம் 38முறை மேட்டூர் அணை நிரம்பியுள்ளது.

மேட்டூர் அணையை 2 முறை இடி தாக்கியுள்ளது. இருப்பினும் எந்த சேதமும்ஏற்படாமல் கடந்த 72 ஆண்டுகளாக கம்பீரமாக நின்று காவிரி டெல்டா பகுதிவிவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கி வருகிறது மேட்டூர் அணை.

மெட்ராஸுக்கு வயசு 368:

அதே போல சென்னைப்பட்டனம் என்றும் மெட்ராஸ் என்றும் அழைக்கப்பட்டசென்னை மாநகருக்கு இன்று 367 வயது முடிந்து 368வது பிறந்த நாளாகும்.

இதையொட்டி சென்னை நகரில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

367 ஆண்டுகளுக்கு முன் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்தவர்கள் சென்னைகடற்கரையில் வந்து இறங்கினர். தங்களது தொழிலை இங்கிருந்து மேற்கொள்ளவசதியாக ஒரு அலுவலகத்தை நிர்மாணிக்க இடம் தேடினர்.

அப்போது சென்னை நகரம் விஜய நகர பேரரசின் நிர்வாகத்தின் கீழ் இருந்தது.சென்னையை டெமெர்லா வெங்கடாத்ரி நாயக் என்பவர் நிர்வகித்து வந்தார்.சென்னப்ப் நாயக்கர் என்பவருக்குச் சொந்தமான நிலத்தை வாங்கி அங்கு தங்களதுநிர்வாக அலுலவகத்தை கிழக்கிந்திய கம்பெனியார் நிர்மாணித்தனர்.

அப்போது சென்னை மாநகரம் மைலாப்பூர், திருவல்லிக்கேணி, திருவொற்றியூர் எனசிலகிராமங்களை மட்டும் கொண்டதாக இருந்தது. அவற்றை ஒருங்கிணைத்துசென்னப்பட்டணம் என்ற பெயரி நகராக மாற்றினர் கிழக்கிந்திய கம்பெனியார்.

பின்னர் இங்கிலாந்து ஆட்சியாளர்கள் கைக்கு சென்னப்பட்டணம் மாறியது.அவர்களது காலத்தில் தான் அதாவது 1640ம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டைகட்டப்பட்டது. அவர்களது ஆட்சியில் மேலும் சில கிராமங்களைச் சேர்த்து மெட்ராஸ்என்ற பெயரிலான நகரமாக சென்னப்பட்டணம் மாறியது.

ஆங்கிலேயர்கள் கைக்கு மெட்ராஸ் மாறியவுடன் மிகப் பெரும் வளர்சசியைக்கண்டது. மாநகரமாக அது உருவெடுத்தது. இந்தியாவின் பழமையான பெரிய நகராகமாறிய மெட்ராஸ், இந்தியாவின் முக்கியமான பெருநகரங்களில் ஒன்றாக படுவேகமாக வளர்ந்தது.

மெட்ராஸ் நகரமாக உருவாக்கப்பட்டு இன்றுடன் 367 ஆண்டுகள் ஆகின்றன. கடந்தசில ஆண்டுகளாகத்தான் மெட்ராஸ் உருவாக்கப்பட்ட தினம் கொண்டாடப்பட்டுவருகிறது.

இன்று 368வது பிறந்த நாளை கொண்டும் சென்னை இந்தியாவின் நவீன நகரங்களில்ஒன்றாக உருவெடுத்துள்ளது.

தென்னிந்தியாவின் நுழைவாயிலாக திகழும் சென்னை, பழமையை முற்றிலும்மறவாத புதுமை நகரமாக விளங்கி வருகிறது.

சென்னையின் பிறந்தநாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. பழைய சென்னையில் இருந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கஇடங்களின் புகைப்படங்கள அடஙகிய கண்காட்சிக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

பழைய சென்னை நகரின் இயற்கை அழகை, இப்போது உள்ள மாற்றங்களுடன்ஒப்பிட்டுப் பார்த்து சென்னைவாசிகள் மனம் மகிழ்வதற்காக இந்த புகைப்படக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+