பிரதமரின் அண்ணன் ஏற்படுத்திய பரபரப்பு
டெல்லி:
பிரதமர் மன்மோகன் சிங்கின் அண்ணன் ஆட்டோவில் பிரதமர் இல்லத்திற்கு வந்துஇறங்கியதால் அவரை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் பிரதமரே வாசல்வரை வந்து தனது அண்ணனை உள்ளே அழைத்துச் சென்றார்.
பிரமதரின் அதிகாரப்பூர்வ இல்லம் டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில உள்ளது. பலத்தபாதுகாப்பு வளையத்தின் கீழ் உள் பிரதமரின் வீட்டுக்கு சமீபத்தில் 3 பேர் காரில் வந்துபரபரப்பை ஏற்படுததினர். இதையடுத்து பாதுகாபபு மேலும் அதிகரிக்கப்பட்டது.இந் நிலையில் வயதான சீக்கியர் ஒருவர் ஆட்டோவில் வந்து பிரதமர் வீட்டு வாசலில்இறங்கினார். பாதுகாப்பையும் மீறி ஆட்டோ உள்ளே வந்து விட்டதால் அங்குபரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக ஆட்டோவை தடுத்து நிறுத்திய பாதுகாவலர்கள் ஆட்டோவில் இருந்துஇறங்கிய பெரியவரை விசாரித்தனர். அதற்கு அவர் நான் பிரதமரின் உடன் பிறந்தஅண்ணன், பஞ்சாபிலிருந்து வருகிறேன் என்றார். ஆனால் இதைபாதுகாவலர்களநம்பவில்லை.
பஞ்சாப் போலீஸாருடன் தொடர்பு கொண்டு பெரியவர் கூறிய அடையாளங்களைசொல்லி உண்மையிலேயே அவர் அண்ணன்தானா என்று விசாரித்தனர்.
பிரதமரின் உதவியாளருக்கும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் பிரதமரிடம்கூறியுள்ளார்.
இதைக் கேட்ட பிரதமர் மன்மோகன் சிங், ஆமாம், ஆமாம், அவர் இன்று வருவதாகக்கூறியிருந்தார். நான் தான் ரயில் நிலையத்திற்கு ஆள் அனுப்ப மறந்து விட்டேன் என்றுகூறி வேகமாக வீட்டுக்கு வெளியே வந்தார்.
அங்கு வரவேற்பறையில அமர வைக்கப்பட்டிருந்த தனது அண்ணனிடம் ஆசிபெற்றவாரே, பாதுகாப்பு காரணமாக உங்களை விசாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது என்று கூறி வருத்தம் தெரிவித்தார்.
பின்னர் தனது அண்ணனின் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார். அவர்கொண்டு வந்திருந்த லக்கேஜையும் பிரதமரே தூக்கிக் கொண்டு உள்ளே போனார்.
எளிமைக்குப் பேர் போனவர் மன்மோகன் என்பது குறிப்பிடத்தக்கது. நிதியமைச்சராகஇருந்தபோதும், காங்கிரஸ் எதிர்க் கட்சியாக இருந்தபோதும் இவரது வீட்டில்மனைவியின் காருக்கு டிரைவர் கூட வைத்தது கிடையாது. சிங்கின் மனைவியே தனதுமாருதி 800யை ஓட்டிக் கொண்டு போவார்.
பிரதமர் ஆகும் முன் தனது சொந்த உபயோகத்துக்கு காங்கிரஸ் கட்சி தந்த ஒரு பழையஅம்பாசிடர் காரைத் தான் பயன்படுத்தி வந்தார்.
அதே போல நிதியமைச்சராக இருந்தபோது மிகவும் நைந்து போன கதர்ஆடைகளையும் கவலையின்றி அணிவார் சிங். இப்போது தான் உடையில் கொஞ்சம்கவனம் செலுத்துகிறார். ஆனாலும் அவரது எளிமை அவரை இன்னும் விடவில்லை.
அவரது அண்ணனோ பிளைட் ஏறி கூட டெல்லிக்கு வரவில்லை. ரயிலில்வந்திருக்கிறார். அண்ணன் வீட்டுக்கு போன் செய்து கார் வரவழைத்திருக்கலாம்.அதைச் செய்யாமல் ஆட்டோவில் ஏறி வந்திருக்கிறார்.
இப்படி ஒரு பிரதமர்.. இப்படி ஒரு அண்ணன். ஆனால், நம் ஊரில் எந்த வேலைவெட்டியும் இல்லாத வளர்ப்பு மகனே கோடிகளில் திளைக்கிறார். 24/7 என எந்த நேரமும்கூலிங் கிளாசோடு லேட்டஸ்ட் கார்களில் உட்டாலங்கடி லீலைகள் செய்து கொண்டு உலகம் சுற்றித் திரிகிறார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications