மத்திய பிரதேசத்தில் உடன்கட்டை ஏறிய பெண்
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில, தனது கணவரின்சிதையில் குதித்து பழங்குடி இனப் பெண் உடன்கட்டை ஏறினார். இது பெரும்சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
துல்சிபூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேம் நாராயன் கோந்த். 50 வயதான இவர்கடந்த 5 ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகஇருந்தார். நேற்று கோந்த் மரணமடைந்தார்.இதையடுத்து அவரது உடல் நேற்று மாலை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுசிதைக்கு தீ மூட்டப்பட்டது. பின்னர் அனைவரும் மயானத்தை விட்டுச்சென்றுவிட்டனர்.
அனைவரும் போன பின்னர் அங்கு வந்த கோந்த்தின் மனைவி ஜானகி ராணி (வயது45) சிதையில் குதித்தார். சிறிது நேரத்திலேயே ஜானகி ராணியும் கருகி பிணமானார்.
ஜானகி ராணியை காணாமல் கிராமத்தினர் அவரைத் தேடினர். அப்போதுதான்ஜானகிராணி உடன்கட்டை ஏறியது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்தும்போலீஸார் வந்து எரிந்து போன ஜானகி ராணியின் உடலின் எலும்புத் துண்டுகளைமீட்டனர்.
இதுகுறித்து மாவட்ட எஸ்பி முகம்மது ஷகீத் அப்சார் கூறுகையில், இதை உடன்கட்டைஎன்று கூற முடியாது. தீக்குளித்ததாகத் தான் கருத முடியும். சமூக நெருக்கடிகாரணமாக ஜானகி ராணி இதை செய்யவில்லை என்றார்.
இச் சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன் மத்திய பிரதேசத்தில் பன்னா மாவட்டத்தில் தமோலிகிராமத்தில் ஒரு பெண் உடன்கட்டை ஏறினார். கட்டுபாய் என்ற 65 வயது பெண்தனது கணவரின் சிதையில் குதித்து உயிரை விட்டார். அவரை அக் கிராமத்தினரேகட்டாயப்படுத்தி உடன் கட்டை ஏற வைத்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்த அந்தக் கிராமத்திற்கு அப்போதைய முதல்வர் திகவிஜய்சிங பொருளாதாரத் தடை விதித்தார். இதனால் அந்த கிராமத்துக்கு மின்சாரம் தடைசப்ளை தடை செய்யப்பட்டது. வளர்ச்சிப் பணிகள் தடை விதிக்கப்பட்டன.
மேலும், அச்சம்பவம் தொட்பாக பலர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில்கட்டுபாயின் 2 மகன்கள், 2 சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 13பேர் விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் வந்த பாஜக அரசு இந்த விவகாரத்தில்மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் பதிவான வழக்குகளைக் கூட ரத்து செய்தது.
ஆனால், தற்போதைய சம்பவம் தொடர்பாக துல்சிபூர் கிராம மக்கள் மீது எந்தநடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என இப்போதைய முதல்வர் சிவராஜ்செளகான் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், இச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.எதற்காக அந்தப் பெண் இப்படிச் செய்தார் என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.இப்போதைக்கு கிராம மக்கள் மீது அபராதம் விதிப்பது, கைது உள்ளிட்ட எந்தநடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications