பாக் அணு குண்டின் தந்தை கானுக்கு புற்றுநோய்
இஸ்லாமாபாத்:
![]() |
பாகிஸ்தான் அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்படுவரும் தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளவருமான அப்துல் குவாதிர் கான் தொண்டை புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
பொக்ரானில் இந்தியா அணு குண்டு வெடித்து சோதனை செய்து நடத்தியதைத்தொடர்ந்து ஏட்டிக்குப் போட்டியாக பாகிஸ்தானும் அணுகுண்டு சோதனையைநடத்தியது. கான்தான் அந்த சோதனைக்கு தலைமை வகித்தார்
அதன் பிறகு அவருக்கு பாகிஸ்தான் மக்களிடையே பெரும செல்வாக்கு ஏற்பட்டது.
ஆனால், பாகிஸ்தானின் அணு ஆயுத தொழில்நுட்பத்தை (இதை அமெரிக்கா,சீனாவிடம் இருந்து சுட்டவர் கான்) லிபியா, ஈரான், வட கொரியாவுக்கு கான்விற்றதாக கடந்த 2004ம் ஆண்டு சர்வதேச அணு சக்தி ஏஜென்சி தகவல்வெளியிட்டது.
இதையடுத்து பாகிஸ்தான் அரசு கானை கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தது.அன்றுமுதல் அவர் வீட்டுக் காவலிலேயே இருந்து வருகிறார்.
கானுக்கு மாதந்தோறும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுவது வழக்கம்.அதேபோல இந்த மாதம் அவருக்கு பரிசோதனை நடந்தது. 2 டாக்டர்கள் கொண்டகுழு இந்த பரிசோதனையை நடத்தியது.
அப்போது கானுக்கு, தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதை உறுதி செய்து கொள்வதற்காக விரிவான மருத்துவப் பரிசோதனைநடத்தப்பட்டது. அதில் கானுக்கு புற்று நோய் ஏற்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து கானுக்கு மிகச் சிறந்த சிகிச்சை அளிக்கப்படும் என பாகிஸ்தான்அரசு தெரிவித்துள்ளது. அவரது குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்த பின்னர்சிகிச்சை குறித்து முடிவு செயய்பபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications