உலக பணக்காரர்கள்-6வது இடத்தில் பிரேம்ஜி
டெல்லி:
உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவன கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவின் விப்ரோ நிறுவனஅதிபர் ஆஸிம் பிரேம்ஜி 6வது இடம் பிடித்துள்ளார்.
சர்வதேச பொருளாதார இதழான போர்ப்ஸ் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.அதன்படி மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் வகிக்கிறார். அடுத்ததாக பால் ஆலன் 2வது இடத்திலும், மைக்கேல் டெல் 3வது இடத்திலும், லேரி எல்லிசன் 4வது இடத்திலும், ஸ்டீவ் பால்மர் 5வதுஇடத்திலும் இருக்கின்றனர்.
ரூ.61.180 கோடி சொத்துடன் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த உலகின் 6வது பணக்காரர் என்ற பெருமையைஇந்தியாவின் பிரேம்ஜி பெற்றார். இந்த துறையின் டாப் 10 பணக்காரர்கள் அனைவரும் ஆண்கள்.
இவர்கள் உருவாக்கிய நிறுவனங்களான மைக்ரோசாப்ட், ஆரக்கிள், சாப், டெல், விப்ரோ ஆகியவை உலகப்புகழ்பெற்றவை என்பது குறிப்பிடதக்கது.
தகவல் தொழில்நுட்பத்துறையில் உலக அளவில் முதல் 10 இடங்கள் பெற்றுள்ள கோடீஸ்வர்கள்அனைவருடைய நிகர சொத்து மதிப்பு 17,420 கோடி டாலர் ஆகும். இது இஸ்ரேல் நாட்டின் மொத்த உள் நாட்டுஉற்பத்தி மதிப்பை விட அதிகம் என்பது குறிப்பிடதக்கது.
பில்கேட்ஸின் நிகர சொத்து மதிப்பு 5,000 கோடி டாலர் (ரூ. 2,32,500 கோடி) ஆகும்.
இந்தியாவில் அதிகரிக்கும் பணக்காரர்கள்:
இதற்கிடையில் இந்தியாவில் ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமாக சம்பாதிப்பவர்கள் எண்ணிக்ககை கடந்த5 ஆண்டுகளில் 67.6% அதிகரித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் திட்டதுறை துணையமைச்சர் எம்வி.ராஜசேகரன் இதைத் தெரிவித்தார். அவர் கூறியதாவது,
வருமான வரித்துறை புள்ளி விவரங்களின் படி, 10 லட்ச ரூபாய் மற்றும் அதற்கு அதிகமாக சம்பாதிப்பவர்கள்எண்ணிக்கை 91,877. ஆனால் 2000-2001 ஆண்டில் 54,805 பேர்தான் பத்து லட்சத்துக்கும் அதிகமாகசம்பாதித்தனர்.
கடந்த 5 ஆண்டுகளில் லட்சாதிபதிகள் எண்ணிக்கை 67.6 சதவீதம் அதிகமாகி உள்ளது. எழைகளின் எண்ணிக்கைகுறைந்து வருவது மகிழ்ச்சியான செய்தி.
1994ம் ஆண்டில், தினமும் ஒரு டாலர் (ரூ. 46) வருமானம் கூட இல்லாதவர்கள் 47 சதவீதம் பேர் இருந்தனர்.1999-2000ம் ஆண்டில் இது 34.7 சதவீதமாகக் குறைந்துவிட்டது என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications