இங்கிலாந்தின் முதல் முஸ்லீம் மேயர்!
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
இங்கிலாந்தின் பார்டன் நகர மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லீம்சமூகத்தைச் சேர்ந்த மெஹ்மூத் முகம்மது படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
52 வயதாகும் படேல், பார்படோஸில் பிறந்தவர். இவரது பெற்றோர்கள் குஜராத்மாநிலத்தைப் பூர்வீகமாக கொண்டவர்கள். இங்கிலாந்தின் கிளவ் செஸ்டர் ஷயர்மாநிலம் பார்டன் நகர மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் படேல். இங்கிலாந்து நகரமேயராக முஸ்லீம் ஒருவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.செப்டம்பர் 2ம் தேதி மேயராக பதவியேற்கவுள்ளார் படேல். இது குறித்து முகம்மதுபடேல் கூறுகையில், உள்ளூர் சமுதாயங்களுக்கு இணைப்புப் பாலமாக நான் செயல்படுவேன். நான்முஸ்லீமாக இருப்பதால் எனது செயல்பாடுகள் அனைவரின்கவனத்திற்கும் உள்ளாகும் என்பதை அறிவேன்.
கிளவ் செஸ்டர் ஷயரின் மேம்பாட்டுக்காக அனைவரும் இணைந்து உழைக்கவேண்டும் என்றார் படேல்.
கடந்த 15 வருடங்களாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார் படேல். உள்ளூர்காவல் துறை பொது மக்கள் நட்புறவுக் கழகத்திலும் உறுப்பினராக உள்ளார் படேல்.அவரது சமூக சேவையை பாராட்டும் வகையில் மேயர் பதவி இப்போது தேடிவந்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications