அதிமுகவிலிருந்து விலகினார் அரங்கநாயகம்
சென்னை:
முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதிமுக உருவாக்கப்பட்டதுமுதல் அக்கட்சியில் இருந்து வருபவர் அரங்கநாயகம். எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் 10ஆண்டுகள் கல்வி அமைச்சராக இருந்தவர். மூத்த தலைவரான அவர் கடந்த 10 வருடமாக அதிமுகவில் ஓரம் கட்டப்பட்டநிலையில் இருந்தார். இந்த நிலையில் தற்போது கட்சியிலிருந்து விலகுவதாக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அரங்கநாயகம் வெளியிட்டுள்ள அறிககை: கடந்த 10 ஆண்டுகாலமாக அதிமுகவில் ஒதுக்கி வைக்கப்பட்டுவந்தேன். இந்த காலகட்டத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் எனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் கூட திானாகத்தான் கோவையில் முகாமிட்டு அதிமுக வேட்பாளர்களுக்காக வாக்குசேகரித்து வந்தேன். கடந்த 10 ஆண்டுகளில் நான் அடைந்த வேதனைகளும், அவமானங்களும் சொல்லி மாளாது.
1998ம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற மாநாட்டில் என்னை, முத்துச்சாமியை, கண்ணப்பனை மேடைக்கு முன்னால் உட்காரவைத்து துரோகிகள் என்று ஜெயலலிதா திட்டித் தீர்த்தார். அதன் பின்னர் நடந்த அத்தனை பொதுக் குழுக் கூட்டங்களிலும்என்னை துரோகி என்று தான் கூறி வந்தார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை நம்பி அவர் ஆரம்பித்த கட்சியில் சேர்ந்தவன் என்பதால் கடைசி வரையிலும் அதிமுகவைவிட்டு விலகுவதில்லை என்று இருந்து வந்தேன்.
1946ல் நான் அரசியலில் ஈடுபட்டேன். அப்போது நடந்த சட்டசபைத் தேர்தலில் தொழில் மேதை ஜி.டி.நாயுடுவை எதிர்த்துபோட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தியாகி சுப்ரியை ஆதரித்து பிரசாரம் செய்தேன்.
1949ல் அண்ணா, திமுகவை தொடங்கிய போது நானும் அக்கட்சியில் இணைந்தேன். 1972ல் எம்.ஜி.ஆர். திமுகவை விட்டுவெளியேறறப்பட்ட போது, மக்கள் ஆதரவுடன் அதிமுகவை தொடங்கினார். ந ானும் அதிமுகவில் இணைந்தேன்.
10 ஆண்டுகள் ஆசிரியராக இருந்த என்னை கல்வி அமைச்சராக்கினார் எம்.ஜி.ஆர். நான் கல்வி அமைச்சராக இருந்த போதுதான் சுய நிதிக் கல்வியை தமிழகத்தில் அறிமுகப்படுத்தினேன். கல்வியிலும், ஆசிரியப் பணியிலும் பெண்களுக்கு முன்னுரிமைகொடுத்தேன். பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் நான் கல்வி அமைச்சராக இருந்தபோது தான் அமல்படுத்தப்பட்டது.
ஜெயலலிதா தனது பேச்சாலும், எழுத்தாலும், நடவடிக்கைகளாலும் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் வாய்ப்பை இழக்கும் படிசெய்து விட்டார். விழித்துக் கொண்டவர்கள் வெளியேறுகிறார்கள். ஏமாந்தவர்கள் உடன் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்அரங்கநாயகம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications