இந்தி ஆதிக்கத்தை ஏற்க மாட்டோம்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மத்திய அரசின் விளம்பரங்களில் இந்தி இருந்தால் பரவாயில்லை, கூடவே தமிழும்இருக்கட்டும். எக் காரணம் கொண்டு தமிழைப் புறக்கணிப்பதை ஏற்க முடியாது என்றுமுதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன் திருத்தணி தொகுதி அதிமுகஎம்எல்ஏ ஹரி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அவர் பேசுகையில், ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒருவிளம்பரத்தில் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், ப.சிதம்பரம் ஆகியோர்படங்களை பெரிதாகப் போட்டு முழுக்க முழுக்க இந்தியிலேயே விளம்பரம்செய்யப்பட்டுள்ளது.

இது ஒரு தமிழ்ப் பத்திரிக்கையில் வந்துள்ளது. முன்பு தேசிய நெடுஞ்சாலை மைல்கல்லில் முழுக்க முழுக்க இந்தி இடம் பெற்றிருந்திது. பின்னர் அதிமுக ஆட்சியில்அப்போதைய முதல்வர் சுட்டிக் காட்டியதால் தமிழ் மீண்டும் வந்தது.

போபாலில் நடந்த ரயில்வே எழுத்து தேர்வை கட்டாயம் இந்தியில் எழுத வேண்டும்என்று கூறியதால் தமிழக இளைஞர்கள் அதில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

தமிழகத்தில் இந்தியின் ஆதிக்கம் ஏற்படுவதை இந்த அரசு ஆதரிக்கிறதா என்றுகேட்டார்.

அதற்கு முதல்வர் கருணாநிதி பதிலளிக்கையில், மொழிப் பிரச்சினை குறித்து பல்வேறுவிதமான கருத்துக்கள் எழுந்துள்ளன. என்றாலும் தமிழ் மொழி காக்கப்பட வேண்டும்என்பதில் நாம் அனைவரும் ஒரே விதமாக இருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது.

இந்தி ஆதிக்கம் நுழையக்கூடாது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. இதேகாரணத்துக்காக பேராசிரியரும், அவரைச் சேர்ந்த 10 பேரும் த ங்கள் பதவியைஇழக்கும் நிலை ஏற்பட்டது. அதற்கு காரணமாக இருந்தவர்கள் (அதிமுக) கூட இந்திஆதிக்கத்தை எதிர்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

உறுப்பினர் குறிப்பிட்ட மத்திய அரசின் விளம்பரம் முழுக்க முழுக்க இந்தியில் உள்ளது.அதை ஏற்க முடியாது. இந்தி இருக்கட்டும், அதனுடன் தமிழும் இருக்கட்டும்.ஆங்கிலமும் இருக்கட்டும். இந்தியில் மட்டும் விளம்பரம் வெளியிடுவதை, தமிழைபுறக்கணிப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

அவர்களைப் பற்றி உணர்ந்த காரணத்தால் சொல்கிறேன். இந்தியும் இருக்கட்டும்,தமிழும் இருக்க வேண்டும். இந்தி மொழி மாத்திரம் இருக்க வேண்டும் என்றால் அதுதமிழ் இல்லாத பகுதியில் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ், இந்தி என்று வந்தால் தான்இந்தி இடம் பெறலாம்.

தமிழ் இங்கு இடம் பெற வேண்டும் என்பதில் ஒவ்வொருவருக்கும் உள்ள அதேஉணர்வை டெல்லி மதிக்க வேண்டும்.

தமிழை புறக்கணித்து விட்டு இன்னொரு மொழி ஆதிக்கம் இருப்பதை ஏற்க மாட்டோம்.தாங்கிக் கொள்ள மாட்டோம். நான் பிரதிபலித்த இந்த கருத்தையொட்டி மத்தியில்உள்ளவர்கள் உணர்ந்து இனி வெளியிடும் விளம்பரங்களால் தமிழர்கள் புண்படாமல்பார்த்துக் கொள்ள வேண்டும். பார்த்துக் கொள்வார்கள் என்று நம்புகிறோம் என்றார்கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+