இலங்கை-நாளை டெல்லியில் வைகோ போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இலங்கையில் தமிழர்கள் மீது ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களைத் தடுத்துநிறுத்தக் கோரி டெல்லியில் நாளை மதிமுக பொதுச் செயலாளர் வைகோதலைமையில் இலங்கை தூதரகம்முன் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக மதிமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அப்பாவி தமிழர்கள்மீது இலங்கை ராணுவம் நடத்தும் இனப் படுகொலையைக் கண்டித்து நாளை காலை11மணிக்கு மதிமுக சார்பில் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில், டெல்லியில்கண்டனப் பேரணி நடைபெறுகிறது.

இந்தப் பேரணி டெல்லி தெற்கு அவென்யூவிலிருந்து புறப்பட்டு இலங்கை தூதரகம்முன்பு முடிவடைகிறது. அங்கு மறியல் அறப் போராட்டம் நடைபெறுகிறது.

இதில் அவைத் தலைவர் எல்.கணேசன், துணைப் பாதுச் செயலாளர் செஞ்சிராமச்சந்திரன், எம்.பிக்கள் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், டாக்டர் கிருஷ்ணன் உள்ளிட்டகட்சித் தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான மதிமுகவினர் டெல்லிபுறப்பட்டுள்ளனர்.

எம்ஜிஆர் சிலை: வைகோ கண்டனம்

இந் நிலையில் யாழ்பாணத்திலும் வல்வெட்டித்துறையிலம் எம்ஜிஆர் சிலைகளைஇலங்கை ராணுவம் உடைத்து நொறுக்கி சேதப்படுத்தியதற்கு வைகோ கடும்கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஊரடங்கு போட்டு தமிழர்களின் நடமாட்டத்தை முடக்கிவிட்டு சிங்கள ராணுவத்தினர்வெறியாட்டம் போட்டு வருகின்றர். தமிழீழ போராட்டத்தில் அடிப்படையும் அரணும்அமைத்துக் கொடுத்ததில் எம்ஜிஆருக்கு பெரும் பங்குண்டு. இதனால் அரை ஈழமக்கள் நெஞ்சில் வைத்து போற்றுகின்றனர்.

அவரது சிலையை சேதப்படுத்திய இச் செயல் உலகத் தமிழர்களைகாயப்படுத்திவிட்டது. தமிழர் தாயகத்தில் இருந்து சிங்கள ராணுவம் வெளியேறுவதேபிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் என்று கூறியுள்ளார்.

அகதிகள் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வு:

இதற்கிடையே தமிழகத்திற்கு இந்த ஆண்டு வந்துள்ள இலங்கை அகதிகளின்எண்ணிக்கை 10,000 ஆக உயர்ந்துள்ளது.

இலஙகையில் போர் வெடித்ததைத் தொடர்ந்து அங்கிருந்து ஏராளமான தமிழர்கள்அகதிகளாக வந்தவணணம் உள்ளனர். தினமும் நூற்றுக்கணக்கானோர் ராமேஸ்வரம்,பாம்பன், தங்கச்சி மடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து கொண்டுள்ளனர்.

ஜனவரி 12ம் தேதிமுதல் நேற்று வரை மொத்தம் 10,313 பேர் அகதிகளாகவந்துள்ளனர். இவர்களில் 3,537 பேர் பெண்கள், 2,885 பேர் சிறுவர்கள். மொத்தம்3,086 குடும்பங்கள் அதிகளாக வந்துள்ளன. பல அகதிகள் விமானம் மூமாகவும்தமிழகம் வந்துள்ளனர்.

அகதிகளாக வந்தவர்களில் 21 பேர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில்முன்புசெயல்பட்டவர்கள். இவர்கள் செஙக்ல்பட்டு சிறப்பு முகாமுக்குஅனுப்பப்பட்டுள்ளனர். அகதிகளை ஏற்றி வந்ததாக 18 படகுகளை கடலோரக் காவல்படை பறிமுதல் செய்துள்ளது.

மண்டபம் முகாமில் இடநெருக்கடி இருப்பதால், 4,000 பேர் தமிழகத்தின் பல்வேறுஊர்களில் உள்ள முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+