காவல்துறை சீரழிந்து விட்டது: ஜெ. குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக அரசில் தமிழக காவல்துறை சீரழிந்து கிடக்கிறது என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஸ்காட்லாந்து யார்டு போலீஸுக்கு இணையாக மதிக்கப்பட்டு வந்த தமிழக காவல்துறை மைனாரிட்டி திமுகஅரசில் மதிப்பிழந்து, சீரழிந்து போய்க் கிடக்கிறது.

காவல்துறையின் பல்வேறு பதவிகளுக்கும் பணம் வாங்கிக்கொண்டு காவல்துறை அதிகாரிள்நியமிக்கப்படுகிறார்கள். மேலதிகாரிகளை, கீழ் அதிகாரிகள் மதிப்பது என்பது இல்லாமல் போய் விட்டது.

முந்தைய ஆட்சியில் பணி மூப்பு அடிப்படையில் தான் பதவிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஆனால்இன்று காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. திமுகவினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் தரும் பட்டியலின் படி தான்காவலர்கள், அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.

சிறப்புப் பிரிவுகளான உணவுக் கடத்தல் பிரிவு, போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு, திருட்டு வீடியோதடுப்புப் பிரிவு ஆகியவற்றில் பணியாற்ற லஞ்சம் வாங்கிக் கொண்டு ஆட்களை நியமிக்கிறார்கள்.

எனது ஆட்சியில் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டால் அவை பத்திரிகைகளுக்குவழஙக்ப்படும். ஆனால் இப்போது தினசரி இடமாற்றம் நடந்து வருவதால் பத்திரிகைகளுக்கு தருவதை நிறுத்திவிட்டார்கள்.

சென்னை மாநகர காவல்துறை ஆணையரின் அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்பட்டு விட்டது. அவர் வெறும்பொம்மை அதிகாரியாக உள்ளார். தனக்குக் கீழ் பணிபுரியும் அதிகாரிகளைக் கட்டுப்படுத்த இயலாத நிலையில்உள்ளார்.

சென்னை நகரில் திறமையின் அடிப்படையிலோ, தகுதி அடிப்படையிலோ காவல்துறை அதிகாரிகள்நியமிக்கப்படவில்லை. அதனால் சட்டம் ஒழுங்கு நிலையை சரிவர கையாள முடியவில்லை.

தி.நகர் உதவி ஆணையர் மற்றும் எழும்பூர் உதவி ஆணையர் கடந்த 3 மாதங்களில் 3 முறைமாற்றப்பட்டுள்ளனர்.

முதல்வர் குடும்பங்களைச் சேர்ந்த ஏழு அல்லது எட்டு பேர் தனித்தனி அதிகார மையங்களாக செயல்படுகின்றனர்.இவர்களால் காவல்துறையில் தினம் அதிகாரிகள் பந்தாடப்படுகின்றனர்.

கருணாநிதியின் துணை ராஜாத்தி அம்மாளின் கட்டுப்பாட்டில் சென்னை மத்திய குற்றப் பிரிவு உள்ளது.அதேபோல உளவுப் பிரிவு இன்று பாழடைந்த மண்டபத்தின் இடிபாடுகளைப் போல காட்சி அளிக்கிறது. முக்கியஅதிகாரிகளாக உள்ள ஏடிஜிபி, ஐஜி, டிஐஜி, எஸ்.பி. ஆகிய ஒவ்வொரு அதிகாரிக்கும், வெவ்வேறு அதிகாரிமையஙகளுடன் தொடர்பு இருப்பதால் இவர்களால் ஒன்றுபட்டு, ஒரே குழுவாக பணியாற்ற முடியவில்லை.

எஸ்.பி. அந்தஸ்தில் இருப்பவர்கள் விட்டால் போதும் என்று மூச்சுத் திணறலுடன் உள்ளனர். தென்மாவட்டங்களில் எந்தெந்த காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்பதை கருணாநிதியின்மகன்மு.க.அழகிரி தான் முடிவு செய்கிறார்.

முதல்வர் கருணாநிதி தவிர அவரது மகன்கள் ஸ்டாலின், அழகிரி, தமிழரசு, மனைவி தயாளு அம்மாள், துணைவிராஜாத்தி அம்மாள், மருமகன் முரசொலி செல்வம், பேரன் தயாநிதி மாறன் என அவரது குடும்பத்தினர் தனித்தனிஅதிகார மையமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

சென்னையில், குறிப்பாக பழைய மகாபலிபுரம் சாலையில், ஏராளமான ரவுடிகளும், கொள்ளையர்களும்தோன்றியுள்ளனர். உள்ளூர் திமுக நிர்வாகிகளின் பரிந்துரையில் இனஸ்பெக்டரக்ள் நியமிக்கப்பட்டுள்ளதால்ஆங்காங்கே கட்டப் பஞசாயத்துக்கள் நடந்து வருகின்றன.

மயிலாப்பூரில் 14 கிரவுண்ட் பரப்புள்ள ரூ. 30 கோடி மதிப்புள்ள இடம், பங்க் குமார் என்ற ரவுடியின்தலையீட்டால் வெறும் 3 கோடிக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது. வியாபாரிகள்,சிறு வணிகர்கள், பிளாட்பாரகடைவாசிகள் ஆகியோரை மிரட்டி பணம் பறிப்பது முறையாக நடந்து வருகிறது.

சமீபத்தில், நெல்லை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த பி.கே.ரவி குடிபோதையில் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டுள்ளார். திமுக ஆட்சியில் காவல்துறையின் அவல நிலைக்கு இது சரியானஉதாரணம். அந்த அதிகாரி மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்தியாவிலேயே மிகச் சிறந்த காவல் துறையாக, ஸ்காட்லாந்து யார்டு போலீஸாருக்கு இணையாக மதிக்கப்பட்டுவந்த தமிழக காவல்துறை இப்போது பரிதாபத்துக்குரிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு, திமுக ஆட்சியில் படுகுழியில் தள்ளப்பட்டிருப்பதைப் பார்க்கும் போது வேதனைப்படுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும் என்றுகேட்டுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+