கேரள அமைச்சர் விவகாரம்: 3 நாளில்அறிக்கை!
திருவனந்தபுரம்:
கேரள பொதுப்பணித்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப், டிவி செய்தி வாசிப்பாளர்லட்சுமி கோபகுமாரிடம் அத்துமீறி நடந்து கொண்டது தொடர்பான விவகாரத்தில்இன்னும் 3 நாட்களில் கேரள முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனலட்சுமியை விசாரித்த ஐஜி சந்தியா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜோசப் சென்னையிலிருந்து கொச்சிக்கு விமானம் மூலம் சென்ற போது,தனது இருக்கைக்கு முன்பு அமர்ந்திருந்த முன்னாள் டிவி செய்திவாசிப்பாளர் லட்சுமிகோபகுமாரிடம் அத்து மீறி நடந்து சில்மிஷம் செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.இந்த சர்ச்சை குறித்து பெண் ஐஜி சந்தியாவை விசாரணை நடத்துமாறு கேரள முதல்வர்அச்சுதானந்தன் உத்தரவிட்டார். அதன்படி விசாரணை நடத்திய சந்தியா, நேற்றுமுன்தினம் சென்னை வந்தார்.
நேற்றுகாலை முதல் மாலை வரை லட்சுமி மற்றும் அவரது கணவர் கோபகுமாரிடம்பல மணி நேரம் விசாரணை நடத்தினார். விசாரணையை முடித்துக் கொண்ட ஐஜிசந்தியா இன்று பிற்பகல் திருவனந்தபுரம் திரும்பினார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு விசாரணை குறித்துகேட்டபோது, விசாரணை விவரங்களை நான் வெளியிட முடியாது. கொச்சி சென்றுநாளை கிங்பிஷர் விமான நிறுவன அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவுள்ளேன்.
அதன்பிறகு முதல்வரிடம் அறிக்கை அளிக்கப்படும். 3 நாட்களில் அறிக்கைஅளிக்கபபட்டு விடும் என்றார் சந்தியா.


Click it and Unblock the Notifications
