இன்னொரு போலி பிஷப்-பல கோடி ஸ்வாஹா:4 மனைவிகளுடன் எஸ்கேப்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஏழைகளுக்கு வீடுகட்டித் தரும் திட்டம் என்று கூறி கிட்டத்தட்ட ரூ. 100 கோடி வரைமோசடி செய்துள்ளதாக போலீஸ் பிடியில் சிக்கியுள்ள போலி பிஷப் ஆனந்தராஜைத்தொடர்ந்து இன்னொரு பிஷப்பும் பல கோடிபணத்தை கட்டிடகாண்டிராக்டர்களிடமிருந்து சுருட்டியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்தவர் யோபு சரவணன். வேலூர் கல்வாரிமிஷன் என்ற பெயரில் சென்னை முகப்பேரில் அலுவலகம் வைத்துள்ளார் யோபுசரவணன். இதை அறக்கட்டளையாக அறிவித்த யோபு சரவணன், இதன் மூலம்ஏழைகளுககு வீடு கட்டித் தரும் திட்டத்தை விளம்பரப்படுத்தினார்.

ஒரு லட்சம் ஏழைகளுக்க வீடு கட்டித் தரப் போவதாகவும், இந்த திட்டத்தை ஏற்றுநடத்த தகுதியான காண்டிராக்டர்கள் தேவை எனவும் அவர் விளம்பரப்படுத்தியதால்ஏராளமான காண்டிராக்டர்கள் முகப்பேரில் உள்ள யோபு சரவணன் அலுவலகத்தைஅணுகி விண்ணப்பித்தனர்.

அந்த காண்டிராக்டர்களிடம் பேசிய சரவணன், எனது அறக்கட்டளைக்கு ரூ. 3,000கோடி பணம் வெளிநாட்டிலிருந்து வந்துள்ளது. இந்தத் திட்டத்தை சிறப்பாக நீங்கள்நிறைவேற்றித் தர வேண்டும். டெபாசிட்டாக குறிப்பிட்ட தொகையை நீங்கள் கட்டவேண்டும். அதன் பின்னர் உங்களுக்கு வேலை உத்தரவு வழங்கப்படும் என்றுகூறியுள்ளார்.

இதை நம்பிய ஏராளமான காண்டிராக்டர்கள் தலா ரூ. 2 லட்சம் வரை டெபாசிட்டாககட்டியுள்ளனர். இப்படியாக கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டகாண்டிராக்டர்களிடமிருந்து ரூ. 50 கோடிக்கும் மேல் கறந்துள்ளார் யோபு சரவணன்.

Yobu Saravanan

One of the Yobu Saravanans wifes Shanthi

சரவணன் சொன்ன வார்த்தையை நம்பி பல காண்டிராக்டர்கள் வீடு கட்டும் பணியைதொடங்கியுள்ளனர். ஆனால் சொன்னபடி யோபு சரவணனிடமிருந்து பணம் ஏதும்வராததால் அவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. இந்த நேரத்தில்தான் ஆனந்தராஜ்போலீஸில் சிக்கிக்கொண்டார்.

யோபு சரவணன் போலவே ஆனந்தராஜும் மோசடி செய்து சிக்கியதால்,தெளிவடைந்த காண்டிராக்டரக்ள், சென்னைக்கு வந்து கொடுத்த பணத்தை திரும்பக்கேட்க ஆரம்பித்தனர். ஆனால் அவர்களால் யோபு சரவணனை நேரில் சந்திக்கமுடியவில்லை. இதையடுத்து 18 காண்டிராக்டர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர்.

மத்திய குற்றப் பிரிவு போலீஸில் அவர்கள் கொடுத்துள்ள புகாரில், கிட்டத்தட்ட ரூ. 30லட்சம் பணத்தை யோபு சரவணன் மோசடி செய்து விட்டதாக கூறியுள்ளனர். தமிழகம்,கேரளாவின் பல பகுதிகளிலும் யோபு சரவணன் மோசடி செய்துள்ளார்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் 150க்கும் மேற்பட்டகாண்டிராக்டர்களிடம் யோபு சரவணன் மோசடி செய்துள்ளார்.

தற்போது அவரைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.ஆனந்தராஜுக்கு இணையாக யோபு சரவணனும் மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் எனபோலீஸார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து அவரைப் பிடிக்க நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது.

யோபு சரவணனுக்கு 4 மனைவிகள், 7 குழந்தைகள் உள்ளனர். முதல் மனைவி பெயர்சாந்தி, இரண்டாவது மனைவி பெயர் மெர்சி, மூன்றாவது மனைவி பெயர் அமுதா.நான்காவது மனைவியின் பெயர் தெரியவில்லை.

காண்டிராக்டர்களிடம் வசூலித்த பணத்தில் ஒவ்வொரு மனைவிக்கும் தனித்தனியாக பங்களாக்கள் கட்டிகொடுத்துள்ளார். வேலூர் துரைப்பாடியில் உள்ள பங்களாவில் முதல் மனைவி சாந்தியும், காட்பாடி அருகேஉள்ள அல்லாபுரம் எழில் நகரில் இருக்கும் பங்களாவில் 2வது மனைவி மெர்சியும் வசித்து வந்தனர்.

3வது மனைவி அமுதா சென்னை கொளத்தூரில் உள்ள பங்களாவில் வசித்தனர். 4வது மனைவி சென்னைபெரவள்ளூரில் உள்ள பங்களாவில் வசிப்பதாகக் கூறப்படுகிறது. 4 மனைவிகளுக்கும் சொகுசு கார்களும் வாங்கிகொடுத்துள்ளார்.

யோபு சரவணன் மீது கடந்த ஒரு மாதமாகவே ஏராளமான காண்டிராக்டர்கள் மோசடி புகார்கள் கொடுக்கஆரம்பித்தனர். இந் நிலையில் யோபு சரவணன் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சென்னை கமிஷனர்அலுவலகத்துக்கு வந்து பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது காண்டிராக்டர்களிடம் வாங்கியபணத்தை திருப்பி கொடுக்க தயார் என்று அறிவித்தார். பணத்தை திரும்ப வாங்க நினைக்கும் காண்டராக்டர்கள்தன்னுடைய முகப்பேர் அலுவலகத்துக்கு வரும்படியும் கூறினார்.

இதையடுத்து காண்டிராக்டர்கள் சென்னை முகப்பேர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களாக முற்றுகையிட்டனர்.ஆனால், யாருக்கும் யோபு சரவணன் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை.

இதனால் நேற்று முன்தினம் மாலையில் 18 காண்டிராக்டர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர்சத்திய நாராயணனை சந்தித்து புகார் மனுவை கொடுத்தனர். புகார் கொடுத்தவர்களில் பாதி பேர் கேரளத்தைச்சேர்ந்தவர்கள் ஆவர்.

யோபு சரவணனின் அறக்கட்டளை நிர்வாகியும், மோசடியில் முக்கிய பங்கு வகிப்பவருமான சித்த வைத்தியடாக்டர் ராஜன் என்பவரை போலீசார் இப்போது விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+