13 சிறுவர்களைக் கொன்ற 2 சகோதரிகளுக்கு மரண தண்டனை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

திருட்டிலும், பிச்சை எடுப்பதற்காகவும் சிறுவர்களை கடத்தி வந்து பின்னர் அவர்களில்13 பேரை கொலை செய்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 2 சகோதரிகளுக்குமும்பை உயர்நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் ரேணுகா பாய், ரிங்குபாய். இவர்கள் இருவர்மற்றும் அவர்களது தாயை கைது செய்த போலீஸார் அவர்கள் மீது வழக்குதொடர்ந்தனர். இந்த மூன்று பேரும் சேர்ந்து ஏராளமான சிறுவர், சிறுமியரை கடத்திவந்து பிச்சை எடுக்க வைத்தும், திருட வைத்தும் பிழைத்து வந்துள்ளனர்.

அவர்களில் 13 பேரை இந்த மூன்று பேரும் சேர்ந்து கொன்று விட்டனர். இந்தவழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் 3 பேருக்கும் மரண தண்டனை விதித்தது.விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே ரேணுகா சகோதரிகளின் தாயார்இயற்கையாக மரண மடைந்தவிட்டார்.

தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி இரு சகோதரிகளும்உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்தநீதிபதிகள் ஜி.பி.மாத்தூர், கே.ஜி.பாலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தும், மரண தண்டனையை நிறைவேற்ற விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செயதும் தீர்ப்பளித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+