லாரி மோதி சிறுவன் பலி: காஞ்சி அருகே சாலை மறியல் -கல்வீச்சு!
காஞ்சிபுரம் :
மணல் லாரி மோதி 12 வயது சிறுவன் பலியானான். இதனால் கொந்தளித்துப் போனகிராம மக்கள் சாலை மறியலில ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள கிரிதரப்பேட்டை கிராமத்தைச்சேர்ந்த மாமல்லன் என்கிற அஜீத்குமார் (வயது 12) நாயக்கன் பேட்டையில் உள்ளஅரசு மேல்நிலைப் பள்ளியில், 6ம் வகுப்பு படித்து வந்தான்.பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாமல்லன் சைக்கிளில் வந்து கொண்டிருந்தான்.அப்போது தாங்கி என்ற இடத்தில் காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு வேகமாகசென்ற மணல் லாரி மாமல்லன மீது பயங்கரமாக மோதியது. இதில் உடல் நசுங்கிசம்பவ இடதிதலேயே இறந்தான் மாமல்லன்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த லாரி டிரைவர்அக்பரை கைது செய்தனர். மாமல்லனின் உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. தகவல் அறிந்ததும் ஊர் மக்கள் ஒன்று திரண்டு அரசுமருத்துவமனைனக்கு சென்றனர்.
அங்கு பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் உடலைப் பெற்றுக் கொண்ட அவர்கள்கருக்குப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே உடலை சாலையில் போட்டு மறியல்போராட்டத்தில்குதித்தனர்.
பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 100 பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்டவர்கள்நடத்திய போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மணல் லாரிகள்இனிமேல் ஊருக்குள் வரக் கூடாது, ஆட்சித் தலைவர் வந்தால்தான் போராட்டத்தைகைவிடுவோம் என்ற மக்கள் கோஷமிட்டனர்.
ஒரு கட்டத்தில் போலீஸார் பொதுமக்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்கமுயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் விபத்துக்குக் காரணமானலாரியின் டயர்களை தீவைத்து கொளுத்தினர். கண்ணாடிகளை உடைத்தனர்.
மக்கள் நடத்திய கல்வீச்சில் சப்இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர்கள் உள்ளிட்ட4 பேர்காயமடைந்தனர்.
இதையடுத்து எஸ்.பி. அமல்ராஜ் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களிடம் பேச்சுநடத்தினார். அதன் பின்னர் சாலைமறியல், லாரி டயருக்கு தீ வைத்தல், போலீஸார் மீதுகல்வீசித் தாக்குதல் ஆகியவற்றுக்காக 5 கிராமங்களைச் சேர்ந்த 505 பேர் மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆனால், அவர்கள் அனைவரும் தலைமறைவாகிவிட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications