தமிழக எம்எல்ஏக்களுக்கு ரூ.4000 ஊதிய உயர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் எம்எல்ஏக்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.

இன்று சட்டசபையில் நிதியமைச்சர் அன்பழகன் பேசுகையில், எம்எல்ஏக்களுக்கு கூடுதலாக ரூ. 2,000 ஊதியம்உயர்த்தித் தரப்படும் என்று அறிவித்தார்.

அப்போது பேசிய எம்எல்ஏக்கள் சம்பளத்தை மேலும் உயர்த்த வேண்டும் என்று கோரினர். இதையடுத்துமுதல்வர் கருணாநிதி ஊதியத்தை மேலும் ரூ. 2,000 உயர்த்தலாம் என்றார்.

இதையடுத்து ஊதிய உயர்வு ரூ. 4,000 ஆக இருக்கும் என அன்பழகன் அறிவித்தார். அவர் கூறுகையில்,

இந்த ஊதிய உயர்வால் எம்எல்ஏக்களுக்கு மாதம் ரூ. 20,000 ஊதியம் கிடைக்கும். அமைச்சர்கள், சபாநாயகர்,துணை சபாநாயகர், எதிர்க் கட்சித் தலைவர், அரசு கொறடா ஆகியோருக்கு ரூ. 21,500 ஊதியம் கிடைக்கும்.

இந்த ஊதிய உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என்றார்.

அப்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன், எம்எல்ஏக்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர்கள் வழங்கவேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த அன்பழகன், தொகுதி வளர்ச்சி நிதிக்காக ஒதுக்கப்படும் ரூ. 1.2 கோடியில் எம்எல்ஏக்கள்லேப்டாப்களை வாங்கிக் கொள்ளலாம் என்றார்.

ஊதிய உயர்வு குறித்து அறிவிப்பை அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களும் மேஜைகளைத் தட்டி வரவேற்றுக்கொண்டிருந்தனர். அப்போது பேசிய மார்க்சிஸ்ட் எம்எல்ஏக்களான பாலபாரதியும் சிவபுண்ணியமும்,

இந்த ஊதிய உயர்வு அறிவிப்பை எங்கள் கட்சி எதிர்க்கிறது. இதனால் அரசுக்கும் கடைசியில் மக்களுக்கும் தான்சுமை கூடும் என்றனர்.

அப்போது பேசிய ஞானசேகரன், கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளத்தில் எம்எல்ஏக்களுக்கு மாதம் ரூ. 35,000மும்,இடதுசாரிக் கட்சி எம்பிக்களுக்கு மாதம் ரூ. 65,000மும் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

ஆந்திராவில் எம்எல்ஏக்களுக்கு ரூ. 43,000மும், மகாராஷ்டிரத்தில் ரூ. 65,000மும் ஊதியம் தரப்படுகிறது.எனவே தமிழக அரசும் ஊதியத்தை மேலும் உயர்த்த வேண்டும் என்றார்.

அப்போது இடைமறித்த முதல்வர் கருணாநிதி,

இடதுசாரிக் கட்சிகள் எதிர்த்திருக்காவிட்டால் உங்களுக்கு இன்னும் கூட அதிகமான ஊதியத்தைவழங்கியிருப்போம் என்றார் சிரித்தபடியே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+