பவுர்ஃபுல் பெண்கள்: இந்திரா நூயிக்கு 4வது இடம்-13வது இடத்தில் சோனியா!
நியூயார்க்:
உலகின் சக்தி வாய்ந்த பெண்மணியாக ஜெர்மனி அதிபர் ஏஞ்செலா மெர்க்கல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பெப்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ள இந்தியரான இந்திரா நூயிக்கு 4வதுஇடம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு 13வது இடம் கிடைத்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிக்கை அதிக அதிகாரம் படைத்த உலகின் 100 பெண்களைவரிசைப்படுத்தி பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் உலகிலேயே அதிக சக்தி வாய்ந்த பெண்மணியாகஜெர்மனி அதிபர் மெக்கல் அறிவிக்கப்பட்டுள்ளார்.அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீஸா ரைஸ் 2வது இடத்தில் உள்ளார். இந்தியாவில் பிறந்துஅமெரிக்க குடியுரிமை பெற்று, பெப்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக விரைவில்பொறுப்பேற்கவுள்ள இந்திரா நூயிக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.
இந்தப் பட்டியலில் மொத்தம் நான்கு இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு 13 வது இடம், ஐசிஐசிஐ வங்கியின் இணை நிர்வாக இயக்குநர்களான லலிதா குப்தே, கல்பனாமொர்பாரியாவுக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. துபாயைச் சேர்ந்த ஜம்போ குழு தலைவரான வித்யாசப்ரியாவுக்கு 95 வது இடம் கிடைத்துள்ளது.
முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டனின் மனைவி ஹில்லாரிக்கு 18வது இடம், பில்கேட்ஸின் மனைவிமெலிண்டாவுக்கு 12வது இடம் கிடைத்துள்ளது. அமெரிக்க அதிபர் புஷ்ஷின் மனைவி லாரா 43வது இடத்தில்உள்ளார். இங்கிலாந்து அரசி எலிசபெத்துக்கு 46வது இடம், மியான்மர் ஜனநாயக தலைவி ஆங் சென் சூகியிக்கு47வது இடம் கிடைத்துள்ளது.
சோனியா காந்தி குறித்து போர்ப் பத்திரிக்கை வெளியிட்டுள்ள கருத்தில், பிரதமர் மன்மோகன் சிங்கை விடசோனியா காந்திக்குத் தான் அதிக அதிகாரங்கள் உள்ளது. கிட்டத்தட்ட பிரதமரைக் கட்டுப்படுத்தும் அளவுக்குமிகவும் சக்தி வாய்ந்த நிலையில் அவர் உள்ளார். இந்தியாவின் கிராமப்புற ஏழைகளிடையே சோனியாவுக்குநல்ல செல்வாக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் மொத்தம் 53 பேர் இடம்பெற்றுள்ளனர். ஐந்து பேர்இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications