வேண்டும்: திருமா: வேண்டாம்-வைகோ
சென்னை:
சென்னைக்கு அருகே துணை நகரம் அமைக்கும் திட்டத்தை திமுக அரசு கைவிட்டதுதவறு என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன்கூறியுள்ளார்.
சென்னை அருகே வண்டலூர், கேளம்பாக்கம் இடையே செங்கல்பட்டு தாலுகாவுக்கு உட்பட்ட 44 கிராமங்களில்துணை நகரம் அமைக்க அரசு திட்டமிட்டிருந்தது. இதனால் ஏழை மக்கள் நிலங்களை இழக்க வேண்டி வரும்என்று கூறி இந்தத் திட்டத்திற்கு பாமக கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. அதிமுகவும் கடுமையாக எதிர்த்தது.இதையடுத்து இத்திட்டம் கைவிடப்படுவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.இந்த துனை நகரத் திட்டத்தை அதிமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் ஆதரித்துள்ளது. அதேநேரத்தில் அதிமுகவும் மதிமுகவும் எதிர்த்துள்ளன.
விடுதலை சிறுத்தை பொதுச் செயலாளர் திருமாவளவன் வெளியிட்டுள்ளஅறிக்கையில்,
(ராமதாசின்) நிர்ப்பந்தங்களுக்கு திமுக அரசு அடிபணிந்து விட்டது. இதன் மூலம்திமுக அரசின் நிர்வாகத் திறமை நீர்த்துப் போய் விட்டதை உணர முடிகிறது.
சென்னை நகரில் அதிகரித்து வரும் மக்கள் பெருக்கமும், இட நெருக்கடியும் நகரவாழ்க்கையை நரகமாக்கி வரும் நிலையில் துணை நகரம் அமைக்க வேண்டியது மிகஅவசியமாகும்.
இந்த துணை நகரம் சென்னை நகரின் வளர்ச்சிக்கு பெரும் உறுதுணையாகஇருந்திருக்கும். இந்த திட்டத்தை நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து கைவிட்டிருக்கக் கூடாது.எனவே இந்தத் திட்டத்தை நிறைவேற்ற திமுக அரசு முயல வேண்டும்.
இப்படிப்பட்ட நல்ல திட்டத்தை கைவிட்டுள்ளது திமுக அரசின் பலவீனத்தைக்காட்டுகிறது என்று கூறியுள்ளார் திருமாவளவன்.
இது துக்ளக் தர்பார்: வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மாநகருக்கு துணை நகரம் அமைப்போம் என்று அறிவித்து அதை அதிரடியாக வாபசும் பெற்றுள்ளார் கருணாநிதி. இது இந்த அரசின் துக்ளக்தர்பாருக்கு சரியான உதாரணம்.
இந்த துணை நகரத்தை பாமக எதிர்த்தபோது அதை சமாளிப்பேன், போருக்குத் தயார் என்று வீராவேசம் பேசினார். இந்த நகரால் ஆயிரக்கணக்கானகுடும்பங்கள் தங்கள் வீடு, நிலங்களை இழந்து சொந்த மண்ணில் அகதிகளாக நேரிடும், அவலப்பட நேரிடும் என்பதை எல்லாம் சீர்தூக்கிப் பார்க்காமல்அந்த மக்களின் இன்னல்கள் குறித்து கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாமல் துணை நகரை அமைத்தே தீருவேன் என்றார்.
இந்த நிலையில் இந்தத் திட்டத்தை எதிர்த்து அதிமுக பொதுச் செயலாளர் அறிக்கை விட்டார். அதிமுக பொதுச் செயலாளரின் (புரட்சித் தலைவி என்றுசொல்வதை கொஞ்சம் விட்டுள்ளார் வைகோ) எதிர்ப்பால் எரிமலை வெடிக்கும் என்ற அச்சம் காரணமாக திடீர் பல்டி அடித்துள்ளார் முதல்வர் கருணாநிதி.
முடிவெடுத்துவிட்டு பல்டி அடித்துள்ளதன் மூலம் துக்ளக் தர்பார் தடுமாற்றத்துக்கு ஆளாகியிருப்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது என்று கூறியுள்ளார்வைகோ.
கிராம மக்கள் கொண்டாட்டம்:
இதற்கிடையே துணை நகரம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டதையடுத்து நிலங்களை பறிகொடுக்க இருந்த சம்பந்தப்பட்ட 44 கிராமமக்களும் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
44 கிராமங்களிலும் பொது மக்களோடு பாமகவினரும் பட்டாசுகளை வெடித்தும், இனிபபுகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications