கணினி தமிழுக்கு ஒரே யுனிகோட்: கலாம்
சென்னை:
இணையத்தில் தமிழை முன்னணி மொழியாக்க வேண்டுமானால் உலகம்முழுமைக்கும் ஒரே மாதிரியான யுனிகோட் தமிழ் பாண்ட் முறையை அமல்படுத்தவேண்டும் என்று ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியுள்ளார்.
ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் தமிழக முதல்வர் கருணாநிதிக்குதொல்காப்பியர் விருதை கலாம் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில்,உலகம் முழுவதும் கம்ப்யூட்டர்களில் இன்று தமிழ் கொடி கட்டிப் பறக்கிறது.ஆனாலும் பல்வேறு வகையான எழுத்துருக்கள் இருப்பதால் ஆங்கிலத்தைப் போலதமிழ் புகழ் பெறமுடியாமல் உள்ளது.
இதைப் போக்க உலகம் முழுமைக்கும் ஒரேமாதிரியான தமிழ் எழுத்துருவைப்பயன்படுத்தும் வகையில், ஒரே யுனிகோட் முறையை உருவாக்க தமிழறிஞர்களும்,கம்ப்யூட்டர் நிபுணர்களும் கடுமையாக உழைக்க வேண்டும்.
தமிழ் சமுதாயம் மற்றும் தமிழ் அறிஞர்கள் முன் இருக்கும் பெரும் பணி இது.
பல தமிழ்ச் சொற்களுக்கு யுனிகோட் முறையில் உள்ளீடுகள் இல்லை. இந்த நிலைஅகற்றப்பட வேண்டும். தமிழ் உலகமயமாக ஒரேமாதிரியான யுனிகோட் பாண்ட்கண்டிப்பாக தேவை.
சென்னை பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம், ஆழ்வார்கள் ஆய்வு மையம்ஆகியவை இணைந்து இந்த ஆய்வுப் பணியில் ஈடுபடலாம்.
இதற்காக 20 முனைவர் பட்ட (டாக்டரேட்) சீட்டுகளை ஒதுக்கி ஆய்வுகளைநடத்தலாம். இதன் மூலம் தொல்காப்பிய காலம் முதல் உள்ள தமிழை கம்ப்யூட்டரில்உள்ளீடு செய்யமுடியும்.
தொல்காப்பியம், காலத்தைக் கடந்தது. இன்றும் இறவாமல் இருப்பது. இதைமுழுமையாக ஆராய்ந்து படித்துப் பார்த்தால், இன்றையச சமூகத்தை எப்படிஅறிவுசார்சமூகமாக மாற்றலாம் என்பதற்கான ஏராளமான விஷயங்கள் ஆரம்ப காலஇலக்கியமான தொல்காப்பியத்தில் ஏராளமாக உள்ளதை அறிய முடியும் என்றார்கலாம்.
மேலும் கருணாநிதி எழுதிய தொல்காப்பியப் பூங்கா நூலிலிருந்தும் பல வரிகளைஉதாரணம் காட்டிப் பேசினார் கலாம்.
இதையடுத்து முதல்வர் கருணாநிதி பதிலுரை ஆற்றினார். அவர் பேசுகையில்,
தமிழுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் அயராது பாடுபடுவதே ஆழ்வார்கள் ஆயவுமையத்திற்கு நான் காட்டும் நன்றிச் செயலாக அமையும்.
தொல்காப்பியத்தை இன்றைய இளைஞர் சமுதாயமும் புரிந்து கொள்ள முடியும்எனபதை நிரூபிக்கத்தான், விளக்கத்தான் தொல்காப்பியப் பூங்கா நூலை நான்எழுதினேன் என்றார்.
நிகழ்ச்சியில் ஆழ்வார்கள் ஆய்வு மைய தலைவர் ஆர்.எம்.வீரப்பன், நிறுவனசெயலாளர் ஜெகத்ரட்சகன்,அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்வி.சி.குழந்தைச்சாமி, தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வைநடராஜன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications