உள்ளாட்சி தேர்தல்-அதிமுகவுடன் கூட்டு: வைகோ
ஆரணி:
வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் தான் கூட்டணி அமைக்கவுள்ளோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
திருவண்ணாமலை மாவட்ட மதிமுகவினருடன் ஆரணியில் வைகோ ஆலோசனை நடத்தினார். அப்போதுஅவர் பேசுகையில்,ஈழத் தமிழர் பிரச்சனைக்காக டெல்லியில் இலங்கை தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். டெல்லியில்உள்ள காங்கிரஸ் முதல்வரும் மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசும் எங்களுக்கு பாதுகாப்பு தந்தார்கள்.அதற்காக காங்கிரசுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
டெல்லியிலும் சென்னையிலும் நடந்த பேரணிக்கு தொண்டர்களை நாங்கள் அவைக்கவில்லை. அப்படியிருந்தும்ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டு, மக்கள் பிரச்சனையை தீர்க்கும் இயக்கம் என்றால் அதுமதிமுக தான் என்ற நிரூபித்துக் காட்டியுள்ளனர்.
இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் மின்சாரம் இல்லை. சரியான சாப்பாடு இல்லை. பசி, பட்டினியால்துன்பப்படுகிறார்கள்.
திமுக தலைவர் கருணாநிதி சென்னைக்கு துணை நகரம் அமைப்பேன் என்றார். அதற்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா எதிர்ப்புத் தெரிவித்ததால் பல்டி அடித்துவிட்டார்.
வரும் உள்ளாட்சித் தேர்தலில் மக்களை நீங்கள் சந்திக்கப் போகும்போது உங்களிடம் 2 ஏக்கர் நிலம், கலர் டிவி,கேஸ் இணைப்பு, கேஸ் அடுப்புகளை கேட்க தயாராக இருக்கிறார்கள். உங்களை இரண்டில் ஒன்று பார்க்கப்போகிறார்கள்.
நமக்கு (மதிமுகவுக்கு) நல்ல காலம் வரும்போது கட்சிக்கு உழைப்பவர்களுக்கு உழைப்புக்கேற்ற நல்ல பதவிதேடி வரும். இந்த முறை உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் தான் கூட்டணி. யாருக்காவது சீட்கிடைக்காவிட்டால் அடுத்து வரும் காலத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
வெற்றிக்காக உழைக்க இப்போதே தயார்படுத்திக் கொள்ளுங்கள். வெற்றி நமதே என்றார் வைகோ.
வைகோ மீதான வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்
இதற்கிடையே வைகோ மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரி தொடரப்பட்டவழக்குக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அருகே சிங்கப்பெருமாள் கோவிலைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் பால் என்பவர் உயர்நீதிமன்றத்தில்மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தி.நகரில் நடந்த மதிமுக கூட்டத்தில், விடுதலைப் புலிகளுக்குஆதரவாக பேசிய வைகோ மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ரகுபதி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒரு வாரத்திற்குஒத்திவைத்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications