இன்று காலை 11 மணிக்கு.. வந்தே மாதரம்!
சென்னை:
இந்தியா முழுவதும் இன்று காலை 11 மணிக்கு வந்தே மாதரம் பாடலை பாடஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் முஸ்லீம்களில் ஒரு பிரிவினரும்,சீக்கியர்களும் இப்பாடலலைப் பாட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வங்கக் கவி பக்கிம் சந்திரசாட்டர்ஜி எழுதிய தேச பக்திப் பாடலான வந்தே மாதரம்பாடப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இன்று அப்பாடல் பாடப்பட்டுநூறாண்டுகள் நிறைவுறுகின்றன. இதையொட்டி நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில்இப்பாடலைப் பாட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.ஆனால் இப்பாடல் துர்கா தேவியை வழிபடுவதாக உள்ளதால் இப்பாடலை கட்டாயம்பாட வேண்டும் என வற்புறுத்தக் கூடாது என முஸ்லீம் சமுதாயத்தினர் மத்தியஅரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இப்பாடலை பாட வேண்டும் என்பதுகட்டாயமல்ல என்று மத்திய அரசு விளக்கியது.
இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சர்ச்சைக்கு இடையே, இன்றுக்காலை 11 மணிக்கு வந்தே மாதரம் பாடல் நாடு முழுவதும் ஒலிக்கப்படுகிறது. பள்ளி,கல்லூரிகள் தவிர அரசு அலுவலகங்களிலும் வந்தே மாதரம் பாடல் பாடப்படவுள்ளது.
சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், ஒரிசா,கர்நாடகா ஆகிய மாநிலங்களில்வந்தே மாதரம் பாடல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கட்டாயம் இல்லைஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆளுநர் மாநிலங்களிலும் கட்டாயம் பாடவேண்டியதில்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சீக்கியர்களும் இந்தப் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான நிகழ்ச்சிகளில் சீக்கியர்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் எனசிரோண் மணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி கேட்டுக் கொண்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications