அணு ஆயுத தாக்குதலும் நடக்கலாம்-யுஎஸ் அச்சம்
வாஷிங்டன்:
அமெரிக்கா மீது அணு ஆயுத, உயிரியல் ஆயுத தாக்குதல்கள் நடக்கலாம் என்ற அச்சம் பரவியுள்ளது
5 ஆண்டுகளுக்கு முன் நியூயார்க்கில் இரட்டை கோபுரங்கள் மீது நடந்த தாக்குதல் தினமான செப்டம்பர் 11நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் விமானங்களைக் கொண்டு தாக்குதல் நடக்கலாம் என்ற பயம்பரவியுள்ளது.இதையடுத்து விமானப் போக்குவரத்துக்கு கடும் கட்டுப்பாடுகளும் கண்காணிப்புகளும் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் அதை விட மோசமாக அணு, உயிரியல் ஆயுதங்கள் மூலமான தாக்குதல்கள் நடக்கக் கூடும் எனசிஐஏ அமெரிக்க அரசை எச்சரித்துள்ளது. இதையடுத்து அப்படிப்பட்ட தாக்குதலை தடுக்கவும், அதைஎதிர்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகள் மிக ரகசியமாக நடந்து வருகின்றன.
இது குறித்து அமெரிக்க உள் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் மைக்கேல் செர்டாப் கூறுகையில், எந்த வகையானதாக்குதல் நடந்தாலும் அதை சமாளிக்க தயாராக இருக்கிறோம். அது அணு ஆயுத, உயிரியல் ஆயுததாக்குதல்கள்காக இருந்தாலும் சரி என்றார்.
அமெரிக்கா துறைமுகங்கள், விமான நிலையங்களில் அணு கதிர் வீச்சு அடங்கிய பார்சல்களை கண்டறியும் நவீனஸ்கேனிங் கருவிகள் பொறுத்தப்பட்டு வருவதாக அணு கதிர்வீச்சு கண்டுபிடிப்புத்துறையின் இயக்குனர் வெய்ல்ஆக்ஸ்போர்ட் கூறியுள்ளார்.
அரைகுறை அணு ஆயுதங்கள் உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் அபாயம் நிறையவேஇருப்பதாகவும், இதனால் ஆயிரக்கணக்கான உயிர்களும் பல மில்லியன் டிரில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள்சேதமடையவும் வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
நியூயார்க் மக்கள் அவசர காலத்தில் அங்கிருந்து வெளியேற்றப்படும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்பட வ்ேடும்என பிரிட்டனின் க்ரீன்விச் பல்கலைக்கழகத்தின் தீ விபத்துத் தடுப்புப் பிரிவின் இயக்குனர் எட்வர்ட் காலியேகூறியுள்ளார்.
செப்டம்பர் 11 தாக்குதல் தினத்தையொட்டி நியூயார்க்கில் நடந்த ஆய்வரங்கத்தில் பேசிய அவர் இதனைத்தெரிவித்தார்.
நியூயார்க்கின் பாதாள ரயில் நெட்வோர்க் மிக ஆபத்தானதாக இருப்பதாகவும், தீவிரவாத தாக்குதல்கள் ஏதும்நடந்தால் மக்களை காப்பது அவ்வளவு எளிதல்ல என்றும் கூறியுள்ள அவர், பாதுகாப்பு ஏற்பாடுகள், அவசரவழிகள் ஆகியவை அதிகளவில் அமைக்கப்பட வேண்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications