6 மனைவிகளுடன் யோபு ஆந்திராவுக்கு ஓட்டம்
சென்னை:
மோசடி பிஷப் யோபு சரவணனின் பெண் உதவியாளர் எலிசபெத்தை போலீஸார்கைது செய்துள்ளனர்.
ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டம் என்று கூறி தமிழகம் முழுவதும்நூற்றுக்கணக்கான காண்டிராக்டர்களிடம் பல கோடி பணத்தை சுருட்டி விட்டு தனது 6மனைவிகளோடும் தலைமறைவாகி விட்டார் யோபு சரவணன். அவர் ஆந்திராவுக்குஓடிவிட்டதாக தெரியவந்துள்ளது.வேலூர் மாவட்டம் காட்பாடியிலும், சென்னை முகப்பேரிலும் இவர் கல்வாரி மிஷன்அறக்கட்டளை அலுவலகங்களை அமைத்து இந்த மோசடியில் ஈடுபட்டார் யோபுசரவணன்.
கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வரை இவர் மோசடிசெய்திருக்கக் கூடும் எனபோலீஸார் சந்தேகிக்கிறர்கள். போலீஸார் வழக்குப் பதிவு செய்ததும் யோபு சரவணன்தனது 6 மனைவிகளோடு தப்பி விட்டார். அவரை போலீார் தவிரமாக தேடிவருகின்றனர்.
யோபு சரவணனின் கூட்டாளிகளான ராஜனும், டேணியலும் ஏறகனவே போலீஸில்சிக்கியுள்ள நிலையில் தற்போது யோபுவின் பெண் உதவியாளரான எலிசபெத்தைபோலீஸார் கைது செய்துள்ளனர். வேலூரில் வைத்து எலிசபெத் கைதுசெய்யப்பட்டார்.
அவரை சென்னைக்குக் கொண்டு வந்த சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார்தீவிர விசாரணை நடத்தினர். அதன் பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைககப்பட்டார்.
எலிசபெத் வேலூர் அருகே உள்ள கரிகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் எலிசெபத். பிளஸ் டூவரை படித்துள்ளவர் கடந்த 2 வருடமாக யோபுவிடம் உதவியாளராக இருந்து வந்தார்.அவருக்கு மாதம் 3000 ரூபாய் சம்பளமாக கொடுத்து வந்தார் யோபு. மேலும்,எலிசபெத்துக்கு தனி வீடும் கட்டிக்கொடுத்துள்ளார்.
அலுவலகத்திற்கு வரும் காண்டிராக்டர்க்ளை மயக்கும் தொணியில் பேசிஅவர்களிடமிருந்து பணம் கறக்க எலிசபெத்தை பயன்படுத்தியுள்ளார் யோபுசரவணன். மேலும், எலிசபெத்துக்கும், யோபுவுக்கும் நெருக்கமான தொடர்பும்இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்தே போலீஸார் எலிசபெத்தை கைதுசெய்துள்ளனர்.
இவரைத் தவிர யோபுவின் கூட்டாளியான் ராஜன் என்பவரையும், கேரளாவைச் சேர்ந்தபாதிரியார் டேணியல் என்பவரையும் போலீஸ் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் யோபு குறித்த பல தகவல்கள் போலீஸாருக்குகிடைத்துள்ளன. முதலில் யோபுவுக்கு நான்கு மனைவிகள் என்று கூறப்பட்டது.ஆனால் இப்போது மனைவிகளின் எண்ணிக்கை 6 என்று அப்-டேட் ஆகியுள்ளது.
வேலூரைச் சேர்ந்த சாந்தி, காட்பாடியைச் சேர்ந்த மெர்சி ஆகிய இருவர் மட்டுமேஅதிகாரப்பூர்வ மனைவிகள். மற்ற நான்கு பேரையும் அவர் பின்னர் சேர்த்துக்கொண்டாராம். இவர்கள் நான்கு பேரும் அவரது அலுவலகங்களில வேலை பார்த்தவந்த பெண்கள்.
6 பேருக்கும் தனித்தனி பங்களா கட்டிக் கொடுத்துள்ளார். 6 பேரின் பெயரிலும் தலாரூ.1 கோடி வரைக்கும் வங்கியில்முதலீடு செய்து வைத்துள்ளார்.
தற்போது மனைவிகள் 6 பேரையும் அழைத்துக் கொண்டு அவர்ஆந்திராவுக்கு தப்பிஓடிவிட்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும், 6 பேரின் பேரிலும்வங்கியில் போட்டு வைத்திருந்த பணத்தையும் அவர் எடுத்துக் கொண்டுதப்பியுள்ளார்.
இதையடுத்து யோபுவைத் தேடி ஆந்திராவுக்கு போலீஸ் படை விரைந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications