சென்னையிலிருந்து ஆந்திர நக்சலைட்டுகளுக்கு ராக்கெட் லாஞ்சர்கள் சப்ளை!
சென்னை:
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நக்சலைட்டுகளுக்கு சென்னையிலிருந்து அனுப்பப்பட்ட550 ராக்கெட் லாஞ்சர்களை ஆந்திர போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாகநான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் மஹபூப் நகர் மாவட்டம் நல்லமங்களா வனப்பகுதியில் உள்ளசெங்கரெட்டிகுடம் என்ற இடத்தில் போலீஸார் நடத்திய வாகன சோதனையின் போதுசென்னையிலிருந்து வந்த லாரி ஒன்றை மடக்கி சோதனையிட்டனர்.அப்போது அந்த லாரியில் பல சாக்கு மூட்டைகள் இருந்தன. சந்தேகமடைந்தபோலீஸார் அதைப் பிரித்துப் பார்ததபோது 550 ராக்கெட் லாஞ்சர்கள், கண்ணிவெடிகளை இயக்க உதவும் 15 கருவிகள் இருந்தது தெரிய வந்து போலீஸார் அதிர்ச்சிஅடைந்தனர்.
பாதுகாப்பான இடத்துக்கு லாரியை கொண்டு சென்று டிரைவரிடம் தீவிர விசாரைணநடத்தப்பட்டது. அந்த லாரி கிராந்தி டிரான்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்திற்குச்சொந்தமானதாகும். இதன் கிளை இந்தியா முழுவதும் 130 இடங்களில் உள்ளன.
சென்னையில் மொத்தம் 6 இடங்களில் இந்த நிறுவனத்துக்கு கிளைகள் உள்ளன.பிடிபட்ட லாரி அம்பத்தூர் கிளையிலிருந்து வந்ததாகும். இதையடுத்து சென்னைபோலீஸாருக்கு ஆந்திர போலீஸார் தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் சென்னையில உள்ள 6 கிளைகளிலு போலீஸர் விடிய விடியசோதனைநடத்தினர். அம்பததூர் கிளையில், துணை ஆணையர் நிர்மல் குமார் தலைமையில்போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
இதில் அந்தக் கிளையில் வேலை பார்த்து வந்த 4 ஊழியர்களை போலீஸார்விசாரணைக்காக காவல் நிலையம் கொண்டு சென்றனர். நக்சலைட்டுகளுக்காக இந்தராக்கெட் லாஞ்சர்கள் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் உள்ளமாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு இவை பிரித்து வழங்கப்படுவதாக இருந்ததாம்.
தீவிரவாதிகளுக்கும், லாரி உரிமையாளருக்கும் தொடர்பு இருக்கக் கூடும் எனபோலீஸார் சந்தேகிககின்றனர். ராக்கெட் லாஞ்சர்கள் பிடிபட்ட தகவல் அறிந்ததும்மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகளும் சென்னை வந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications