16 பிட் தமிழ் யுனிகோட்: அரசுக்கு பரிந்துரை
சென்னை :
16 பிட் கொண்ட தமிழ் யுனிகோட் எழுத்துருவை உருவாக்குவது தொடர்பானபரிந்துரை அறிக்கை முதல்வர் கருணாநிதியிடம் வழங்கப்படடுள்ளது.
தமிழ் எழுத்துருவில் பல நூறு வகைகள் தற்போது புழக்கத்தில் உள்ளன. ஆனால்எல்லோரும் பயன்படுத்தும் வகையில் யுனிகோட் எழுத்துருக்களை உருவாக்கும்வேலைகளும் நடந்து வருகின்றன.இதில் முழு அளவில் வெற்றி கிடைக்கவில்லை. யுனிகோட் பாண்ட்களில் பலபிரச்சனைகள் உள்ளன. இவற்றைக் களையும் வகையிலும், தமிழ் மொழியில் உள்ளஅனைத்து எழுத்துக்களையும் உள்ளடக்கிய 16 பிட் யுனிகோட் எழுத்துருவைஉருவாக்குவது தொடர்பான மென்பொருளை தயாரிக்க வேண்டும் என்ற கருத்துவலுத்து வருகிறது.
சமீபத்தில் இது தொடர்பாக தமிழக அரசுக்கு ஜனாதிபதி கலாமும் வேண்டுகோள்வைத்தார். யுனிகோட் பாண்ட்களை முழுமையாக உருவாக்க அண்ணாபல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்றார்.
16 பிட் கொண்ட யுனிகோட் தமிழ் எழுத்துருவை உருவாக்கினால் மட்டுமே தமிழைமுழுமையான இணைய தள மொழியாக மாற்ற முடியும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து யுனிகோட் எழுத்துரு குறித்து அரசு செய்ய வேண்டியது என்ன என்பதுகுறித்து பரிந்துரைக்குமாறு முன்னாள் துணை வேந்தர்கள் அனந்தகிருஷ்ணன்தலைமையில் குழு அமைக்கப்பட்டன.
இந்தக் குழு தனது பரிந்துரையை தமிழ் இணையதள பல்கலைக்கழக வேந்தர்வா.செ.குழந்தைச்சாமியிடம் அளித்தது.
சென்னையில் நேற்று நடந்த கனெக்ட் கருத்தரங்க தொடக்க விழாவின்போதுவா.செ.குழந்தைச்சாமி இப்பரிந்துரை அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தார்.
தமிழில் உள்ள 247 எழுத்துக்களையும் தற்போது உள்ள 8 பிட் அமைப்பில் உள்ளடக்கமுடியாது. அதில் 128 எழுத்துக்களை மட்டுமே அடக்க முடிகிறது. எனவேதான் 16பிட் கொண்ட எழுத்துருவை உருவாக்க கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications