இன்று செப்டம்பர் 11- வலியோடு நினைவுகூறும் அமெரிக்கா
வாஷிங்டன்:
5 ஆண்டுகளுக்கு முன் விமானங்களைக் கொண்டு அல்-கொய்தா நடத்திய செப்டம்பர் 11 தாக்குதலை இன்றுவலி மற்றும் அச்சத்துடன் நினைவுகூர்கிறது அமெரிக்கா.
நியூயார்க்கில் உலக வர்த்தக மையங்கள் இருந்த இடத்தில் அதிபர் புஷ், அவரது மனைவி லாரா ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.நிகழ்ச்சியில் பேசிய புஷ், செப்டம்பர் 11 தாக்குதலின் அதிர்ச்சியில் இருந்து இன்னும் நாம் வெளியில் வரவில்லை.அந்த நாள் எனக்குக் கொடுத்த பாடத்தை நான் மறக்க மாட்டேன். இந்த இடத்தில் இன்னும் கூட எதிரிகள்இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.
இது போன்ற தாக்குதல்கள் மீண்டும் நடக்கலாம். அதை தடுக்க நாம் மேலும் தீவிரமாக பாடுபடுவோம் என்றார்.
இன்று மீண்டும் அந்த இடத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்புப்படையினரிடையே புஷ் பேசுகிறார்.
இதைத் தொடர்ந்து பென்சில்வேனியா செல்லும் புஷ் அங்கு தீவிரவாதிகள்-பயணிகள் மோதலில் தரையில்விழுந்து நொறுங்கிய விமானத்தில் பயணம் செய்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.இதையடுத்து பென்டகன் செல்லும் புஷ், அங்கு விமான தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.
அமெரிக்கா முழுவதுமே இன்று பல நினைவுக் கூட்டங்களுக்கும் அமைதிப் பேரணிகளுக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே அமெரிக்கா இன்னும் முழுமையான பாதுகாப்பில் இல்லை என அந் நாட்டு வெளியுறவுஅமைச்சர் காண்டலீஸ்ஸா ரைஸ் கூறியுள்ளார். நமது நாட்டை, விமான நிலையங்களை, துறைமுகங்களை இன்றுநாம் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். ஆனால், அது முழுமையான பாதுகாப்பா என்றால், இல்லை. இன்னும்நிறைய செய்ய வேண்டியிருக்கிறது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications