சென்னையிலிருந்து ராக்கெட் லாஞ்சர்கள் அனுப்பிய சீனிவாச ரெட்டி கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் இருந்து ஆந்திர நக்ஸலைட்டுகளுக்கு ராக்கெட் லாஞ்சர்கள்,குண்டுகளை அனுப்பிய சீனிவாச ரெட்டி என்பவனை ஆந்திரா போலீசார் கைதுசெய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் மகபூப் நகர் மாவட்டம் நலமங்கலா வனப்பகுதியிலும், பிரகாசம்மாவட்டத்திலும் போலீசார் நடத்திய ரெய்டில் குண்டுகளும், அவற்றை ஏவக்கூடியராக்கெட் லாஞ்சர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த ஆயுதங்கள் சென்னையில் இருந்து லாரி மூலம் ஆந்திர நக்சலைட்டுகளுக்குஅனுப்பி வைக்கப்பட்டது தெரிய வந்தது. அம்பத்தூரில் இருந்து 3 முறை லாரிகளில்சாக்கு மூட்டைகளின் மூலம் ராக்கெட் குண்டுகள் அனுப்பட்டுள்ளன. மொத்தம் 137சாக்கு மூட்டைகளில் அவை சுருட்டி வைக்கப்பட்டிருந்தன. அவற்றைசோதனையிட்டதில் 600 ராக்கெட் குண்டுகளும், 27 லாஞ்சர்களும் இருப்பதுதெரிந்தது.

இவை நக்சலைட் தீவிரவாதிகளுக்காக சென்னையில் தயாரானது என்பதுகண்டுபிடிக்கப்பட்டது. அம்பத்தூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ளபட்டறைகள், உருவக்காலைகளில் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதற்கான எந்தமுத்திரையும் பதிக்கப்படவில்லை.

பல்வேறு இடங்களில் தயாரான ராக்கெட் குண்டு, லாஞ்சர் பாகங்களை ஒரு இடத்தில்வைத்து ஒருங்கினைத்துள்ளனர். தீவிரவாதிகளின் ஆயுத தொழிற் சாலையாகஇருக்கும் அந்த ஒருங்கிணைப்புக் கூடமும் அம்பத்தூர் பகுதியில் தான் இருக்குவேண்டும் என்று கருதப்படுகிறது.

அந்த தொழிற் சாலையில் இருந்து ராக்கெட் குண்டுகளை சாக்கு மூட்டைகளில் எடுத்துவந்து கிராந்தி லாரி நிறுவனம் முலம் ஆந்திராவுக்கு அனுப்பும் பணியை சீனிவாசரெட்டி என்பவர் செய்து வந்துள்ளார்.

ஆந்திரா போலீசாரும், தமிழக போலீசாரும் இணைந்து நடத்திய விசாரணைகளில்இந்த தகவல்கள் தெரியவந்தது. இதையடுத்து கிராந்தி லாரி நிறுவன உழியர்கள்கொடுத்து தகவல்களின் அடிப்படையில் சீனிவாச ரெட்டி உருவப்படம் கம்ப்யூட்டரில்வரையப்பட்டது.

அதை வைத்து சீனிவாச ரெட்டியை தேடி வந்தனர். இந் நிலையில் நேற்று ஆந்திரபோலீசாரிடம் சீனிவாச ரெட்டி சிக்கினான். அவனை போலீசார் ரகசிய இடத்துக்குஅழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். சீனிவாச ரெட்டி பிடிபட்டுவிட்டதால் ஆயுத கடத்தல் பற்றிய அனைத்து தகவல்களும் இனி தெரிய வரும்.

சென்னையில் ராக்கெட் குண்டுகள் தயாரிக்கும் ரகசிய ஆயுத தொழிற்சாலை எங்குஉள்ளது என்ற தகவலை சீனிவாச ரெட்டி போலீசாரிடம் தெரிவித்து இருப்பதாகதெரிகிறது. இதன் மூலம் ஆயுத கடத்தல் குறித்து விசாரணையை போலீசார்தொடங்கியுள்ளனார்.

ஆயுத கடத்தலில் சீனிவாச ரெட்டியுடன் ஒரு கும்பல் இயங்குவதாகசந்தேகிக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.சீனிவாச ரெட்டி ராக்கெட் குண்டுகளை ஆந்திராவில் உள்ள வீரைய்யா என்பவர்பெயரில் அனுப்பி வந்துள்ளான்.

வீரைய்யா மூங்கில் மர காண்டிராக்டர். தல்ஸ்ப்பள்ளி கிரமாத்தை சேர்ந்த அவரையும்போலீசார் கைது செய்துள்ளனர். கிடலூர் போலீசார் வீரைய்யாவிடம் விசாரணைநடத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+