தமிழகத்தில் 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் தமிழக தேர்தல்ஆணையர் சந்திரசேகரன் இன்று ஆலோசனை நடத்தினார்.

இக் கூட்டத்தில் டிஜிபி முகர்ஜி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் லத்திகாசரண் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின்செய்தியாளர்களிடம் சந்திரசேகரன் பேசுகையில்,

அக்டோபர் 24ம் தேதி தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம்முடிவடைகிறது. எனவே அதற்குள் கண்டிப்பாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விடும்.

தேர்தலுக்கான 95 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. 5 லட்சம் பணியாளர்கள்தேர்தல் பணியில் ஈடுபடுத்தபபடவுள்ளனர். மொத்தம் 80,458 வாக்குச் சாவடிகள்அமைக்கப்படவுள்ளன.

பதட்டமான வாக்குச் சாவடிகள் அடையாளம் காணப்பட்டு அங்கு பாதுகாப்புபலப்படுத்தப்படும். இதேபோல தேர்தலின்போது தமிழக எல்லைகளிலும் பாதுகாப்புபலப்படுத்தப்படும்.

இது மிகப் பெரிய தேர்தல். எனவே ஒரு கட்டமாக தேர்தலை நடத்துவதை விட 2கட்டமாக நடத்தலாம் என தீர்மானித்துள்ளோம் என்றார் சந்திரசேகரன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+