மதானி ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி
சென்னை:
கோவை தொடர் குண்டு வெடிப்புக் கைதியான அப்துல்நாசர் மதானியின் ஜாமீன்மனுவை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துவிட்டது.
கடந்த 1998ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 60 பேர்உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கேரள மக்கள் ஜனநாயக கட்சித்தலைவர்அப்துல் நாசர் மதானி, அல்-உம்மா தலைவர் பாட்ஷா உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.தனக்கு சர்க்கை வியாதி இருப்பதாகவும், செயற்கை கால் மாற்றவேண்டியிருப்பதாலும் தன்னை ஜாமீனில விடுவிக்க வேண்டும் என்று கோரி மதானிசென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் மனு செய்தார். ஆனால்அனைத்து மனுக்களும் தளளுபடி செய்யப்பட்டு விட்டன.
இந் நிலையில் சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மீண்டும் அவர்மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தணிகாச்சலம், மதானியின்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடடார்.
நீதிபதி வெளியிட்ட தீர்ப்பில்,
மதானி மீது பல கிரிமினல் வழக்குகள் உள்ளன. கடந்த ஆண்டு மார்ச் மாதமேமதானியின் ஜாமீன் மனுவை விரிவாக விசாரித்து உயர்நீதிமனறம் தள்ளுபடிசெய்துள்ளது.
மருத்துவ காரணங்களுக்காகவோ, வேறு காரணங்களுக்காவோ அவரை ஜாமீனிலவிடுவிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தெளிவாக கூறி உள்ளது. இதையேதான்உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
அதே சூழ்நிலைதான் தற்போதும நிலவுகிறது. மதானியை ஜாமீனில்விடுவிப்பதற்கான சூழ்நிலை வரவில்லை. சர்க்கரை நோயாளியான அவரது ஒரு கால்ஏற்கனவே துண்டிக்கப்பட்டு விட்டது.
ஆயுர்வேத சிகிச்சை உள்பட நல்ல மருத்துவ சிகிச்சையை மருத்துவமனையிலேயேஅளிக்க அரசுமுன் வந்துள்ளது. மதானி குறிப்பிடும் டாக்டர் மூலமாகவே சிகிச்சை தரதயாராக இருப்பதாகவும் அரசு தெரிவிக்கிறது.
ஆனால் சிறைக்கு வெளியே போய்தான் சிகிச்சை பெற வேண்டும் என மதானிகூறுகிறார். எனவே மருத்துவ சிகிச்சை பெறுவது என்பதை விட சிறையை விட்டுவெளியே வர வேண்டும் என்பதுதான் மதானியின் முக்கிய நோக்கமாக உள்ளது.
அவரது மனதில் என்ன உள்ளது என்பது புரியவில்லை. கோவை குண்டுவெடிப்புவழக்கின் விசாரணை இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் முடிந்து விடும். எனவேஅதற்கள் அவரை ஜாமீனில விடுதலை செய்யமுடியாது என்று தீர்ப்பில் கூறியுள்ளார்நீதிபதி தணிகாசசலம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications