நக்ஸல்கள்: தமிழக-ஆந்திர டிஜிபிக்கள் ஆலோசனை
சென்னை:
ராக்கெட் லாஞ்சர்கள் பிடிபடட விவகாரம் தொடர்பாக தமிழக மற்றும் ஆந்திர மாநிலடிஜிபிக்கள் இன்று சென்னையில் முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர்.
சென்னை அம்பத்தூரில் உள்ள கிராந்தி லாரி டிரான்ஸ்போர்ட்ஸ் நிறுவன லாரிகள்மூலம் ஆந்திராவில் நக்சலைட்டுகளுக்கு அனுப்பப்பட்ட ராக்கெட் லாஞ்சர்கள்குவியலை கடந்த வாரம் ஆந்திர மாநிலம் மஹபூப் நகர போலஸீார் பறிமுதல்செய்தனர்.இதையடுத்து கிராந்தி நிறுவனத்தின் சென்னை கிளைகளில போலீஸார் தீவிர சோதனைபோட்டனர். இந்த சோதனையின்போது சென்னையிலிருது மொத்தம் மூன்று முறை5,000 கிலோ எடையுள்ள குண்டுகள், லாஞ்சர்கள் அனுப்பப்பட்டது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து ஆந்திராவிலிருந்து எஸ்.பி. பிரபாகர் ராவ் உள்பட 3 தனிபபடைபோலீஸார் சென்னை வந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மெஹபூப் நகர் மாவட்ட உளவுப் பிரிவு எஸ்.பி. சீனிவாச ரெட்டியும் சென்னையில்முகாமிட்டுள்ளார். தமிழக போலீஸாருடன் இணைந்து ஆந்திர போலீஸார் அம்பத்தூர்தொழிற்பேட்டை பகுதியில் தீவிர சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில், தமிழக அரசுடன் இணைந்து கூட்டு அதிரடிப்படையை உருவாக்கிஆயுதக் கடத்தை தடுக்க ஆந்திர அரசு யோசித்து வருகிறது. இரு மாநில எல்லைப்பகுதிகளில் இந்த கூட்டு அதிரடிப்படைகள் நிறுத்தப்படும்.
நக்சலைட்டுகளை ஒழிக்க இந்த கூட்டு அதிரடிப்படை அவசியம் என ஆந்திரகாவல்துறை கருதுகிறது. இதுதொடர்பாக விவாதிக்க ஆந்திர மாநில டிஜிபிஸ்வரன்ஜித் சிங் சென்னை வந்துள்ளார்.
இன்று தமிழக டிஜிபி முகர்ஜியை அவர் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
3 ஆண்டாக நடக்கும் கடத்தல்- ஆந்திர டிஜிபி
இதற்கிடையே சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு கடந்த 3 ஆண்டுகளாகவேராக்கெட் குண்டுகள் கடத்தப்பட்டு வருவதாக ஆந்திர டிஜிபி ஸ்வரன்ஜித் சிங்கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
கடந்த 3 ஆண்டுகளாகவே ராக்கெட் குண்டுகள் தமிழகத்தில் தயாரிக்கப்பட்டுஆந்திராவுக்கு அனுப்பட்டது தெரிய வந்துள்ளது. அது பற்றி இரு மாநில போலீசும்இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிடிபட்ட ராக்கெட் குண்டுகள் அனைத்தும் ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டவை என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications