சசிகலாவுக்கு சம்மன்: ஜெ. வீட்டில் மீண்டும் ஒட்டப்பட்டது!
சென்னை:
சொத்துக் குவிப்பு வழக்கில் வரும் 22ம் தேதி பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நேரில்ஆஜராக வேண்டும் என சசிகலாவுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ்அனுப்பியுள்ளது. இந்த சம்மன் சசிகலா வசிக்கும் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டஇல்லத்தின் வாசலில் இரண்டாவது முறையாக மீண்டும் ஒட்டப்பட்டுள்ளது.
வருமானத்தை மீறி சொத்து சேர்த்த ஜெயலலிதா, சசிகலா, தினகரன் உள்ளிட்டோர்மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் விசாரணையில்உள்ளது.இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு வழக்கில் சம்பபந்தப்பட்ட அனைவருக்கும்நோட்டீஸ்அனுப்பியது தனி நீதிமன்றம். சசிகலாவைத் தவிர அனைவரும் நோட்டீஸைவாங்கி விட்டனர்.
இதைத் தொடர்ந்து சசிகலாவுக்கு அனுப்பப்பட்ட சம்மனை பெற அவர் மறுப்பதால்அதை அவரது வீட்டு வாசலில் ஒட்ட வேண்டும் என்று கோரி திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
அந்த கோரிக்கை ஏற்கப்பட்டது. இதையடுத்து சசிகலாவுக்கு அனுப்பப்பட்ட சம்மனைஅவரது வீட்டு வாசலில் ஒட்டுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்துகடந்த வாரம் போலீஸார் சசிகலா வசிக்கும் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டஇல்லத்தில் ஒட்டினர்.
ஆனால் அந்த நோட்டீஸை ஜெயலலிதாவின் வேலையாட்கள் கிழித்துப் போட்டுவிட்டனர்.
இந் நிலையில், வரும் 22ம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படிஉச்சநீதிமன்றம் சசிகலாவுக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த சம்மன் நகலையும் சசிகலா வீட்டு வாசலில் ஒட்டுமாறு உச்சநீதிமன்றம்உத்தரவிட்டது. அதன்படி நேற்று மாலை இந்த சம்மன் நகலும் ஜெ-சசிகலா வீட்டுவாசலில் ஒட்டப்பட்டது.
தேனாம்பேட்டை உதவி ஆணையாளர் கண்ணபிரான் தலைமையிலான போலீஸார்சம்மனை ஜெயலலிதா வீட்டு வாசலில் ஒட்டினர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications