கோவை டைடல் பார்க்கில் விப்ரோ, டிசிஸ்
கோவை:
கோவையில் அமையவுள்ள தகவல் தொழில் நுட்பப் பூங்காவில் நிறுவனங்களுக்குஇடம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக விப்ரோ உள்ளிட்ட பல்வேறு தகவல்தொழில்நுட்ப நிறுவன பிரதிநிதிகளுடன் தமிழக அரசின் எல்காட் நிறுவன நிர்வாகஇயக்குனர் உமாசங்கர் ஆலோசனை நடத்தினார்.
சென்னையில் உள்ளது போல டைடல் பூங்காவை கோவை, மதுரை உள்ளிட்டநகரங்களிலும் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாககோவையில், டைடல் பூங்கா அமைக்கப்படவுள்ளது. இதற்கான கட்டட மாதிரியைமுதல்வர் கருணாநிதி சமீபத்தில் சென்னையில் நடந்த விழாவில் திறந்து வைத்தார்.இதைத் தொடர்ந்து தற்போது அடிப்படைக் கட்டமைப்பு உள்ளிட்ட ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கி விட்டன. இந்த நிலையில், டைடல் பூங்காவில் எந்தெந்தநிறுவனங்கள் தங்களது கிளையை இங்கே தொடங்கவுள்ளன, அவர்களுக்குத்தேவைப்படும் இடத்தின் அளவு ஆகியவை குறித்த ஆலோசனை கூட்டம்கோவையில் நடந்தது.
இக்கூட்டத்திற்கு எல்காட் நிர்வாக இயக்குனர் உமா சங்கர் தலைமை வகித்தார்.மாவட்ட ஆட்சித் தலைவர் நீரஜ் மித்தல், டிட்கோ தலைவர் உள்ளிட்டோரும்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
விப்ரோ உள்ளிட்ட பல்வேறு சாப்ட்வேர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது தேவைகளை விளக்கினர்.
பின்னர் உமாசங்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விமான நிலையம், நட்சத்திரஹோட்டல்கள், தொழில் வளர்ச்சி மையங்கள், சிறந்த தட்ப வெப்பம் என கோவைநகருக்கு வளர்ச்சியை கொடுக்கும் பல அம்சங்கள் உள்ளன.
கோவை அரசு மருத்துவக் கல்லூரியின் பின் பகுதியில் 20 ஏக்கர் பரப்பளவில் புதியடைடல் பூங்கா அமைக்கப்படவுள்ளது. ஆரம்ப கட்டப் பணிகள் முடிந்து விட்டன.தகவல் தொழில்நுட்ப வளாகத்திற்கான கட்டுமானப் பணிகள் 2 மாதத்தில் தொடங்கி18 மாதங்களில் நிறைவடையும்.
எல்காட்டும், டிட்கோவும் இணைந்து 10 ஏக்கரில் டைடல் பூங்கா அமைகிறது. 12லட்சம் சதுர அடி பரப்பளவில் இது அமையும். இதேபோல விப்ரோ நிறுவனம் 10ஏக்கர் பரப்பளவிலும், டிசிஎஸ் நிறுவனம் 5 ஏக்கர் பரப்பளவிலும் தங்களது தகவல்தொழில்நுட்ப மையங்களை அமைக்கவுள்ளன. இதுதொடர்பாக ஒப்பந்தம்கையெழுத்தாகிவிட்டது.
இந்த தகவல் தொழிலநுட்ப பூங்கா வளாகம் மூலம் முதல் கட்டமாக 25,000 பேர்வரைக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். அதன் பின்னர் கூடுதலாக 25 ஏக்கர்நிலத்தில் மேலும் பல நிறுவனங்களுடன் பூங்கா விரிவுபடுத்தப்படும்.
இந்த பூங்கா அமையும் பகுதியில் நான்கு வழிச்சாலைகள் அமைக்கப்படும். மேலும்அவினாசி சாலை விரிவுபடுத்துவதுடன் புதிதாக மேம்பாலங்களும் அமைக்கப்படும்என்றார் உமாசங்கர்.
கோவை ஆட்சித் தலைவர் நீரஜ் மித்தல் பேசுகையில், கோவை நகரில் சுற்றுச்சாலை,குடிநீர், மேம்பாலங்கள் உள்பட பல்வேறு பணிகள் ரூ. 3,000 கோடி மதிப்பில் மத்தியஅரசின் ஜவஹர்லால் நேரு நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ்மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் மூலம் நகரின் அடிப்படைக் கட்டமைப்புமேம்படுத்தப்படும் என்றார்.
இக்கூட்டத்தில் விப்ரோ சார்பில் அதன் மூத்த அதிகாரி கணேஷ், டிசிஎஸ் சார்பில்அதன் பொது மேலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications