ராஜபக்ஷேவுடன் ப.சிதம்பரம் சந்திப்பு: இலங்கை இன்னொரு பல்டி
கொழும்பு:
விடுதலைப் புலிகளுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்கவேண்டும் என இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிடம், மத்திய நிதியமைச்சர்ப.சிதம்பரம் நேரில் கோரிக்கை விடுத்தார்.
காமன்வெல்த் நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள சிதம்பரம்கொழும்பு சென்றுள்ளார். மாநாட்டுக்கு முன்னதாக அவர் இலங்கை அதிபர் மகிந்தாராஜபக்ஷேவை அவரது இல்லத்தில்சந்தித்துப் பேசினார்.சந்திப்புக்குப் பின்னர் சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் மீண்டும் பேச்சுவார்த்தைதொடங்கவுள்ளதாக அறிகிறேன்.
இந்தப் பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்க வேண்டும். பேச்சுவார்த்தைதொடங்கினால்தான் இலங்கை தமிழர்களிடையே நிம்மதி நிலவும், இலங்கையிலும்அமைதி திரும்பும்.
இலங்கையில் தற்போது நிலவும் ஸ்திரமற்ற நிலையால் தமிழர்கள் அகதிகளாகதமிழகத்திற்கு வந்து கொண்டுள்ளனர். இரு தரப்பினருக்கும்இடையே பேச்சு தொடங்கினால் அகதிகள் வருகை குறைந்து விடும். இதுகுறித்தும்அதிபருடன் பேசினேன் என்றார்.
பேச்சுக்கு தயார்: இலங்கை மீண்டும் பல்டி
இதற்கிடையே, முதலில் புலிகளுடன் முன் நிபந்தனையின்றி பேச்சுவார்த்தை நடத்தத்தயார் என்று நார்வேயிடம் உறுதியளித்துவிட்டு பின்னர் நாங்கள் அப்படிச் சொல்லவேஇல்லை என்று நேற்று காலையில் பல்டி அடித்த இலங்கை அரசு, மாலையில் தனதுநிலையை மீண்டும் மாற்றிக் கொண்டு பேச்சு நடத்தத் தயார் என்று அறிவித்துள்ளது.
பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசு தயாராக உள்ளதாக நார்வே தூதர் எரிக் சோல்ஹீமும்ஜப்பானிய தூதர் யாசுசி அகாசியும் கூறியதை காலையில் இலங்கை மறுத்தது.
ஆனால், மாலையில் பேச்சுவார்த்தைக்குத் தயார் என அரசு அறிக்கைவெளியிட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்கான இடம், தேதி உள்ளிட்ட விஷயங்கள்குறித்து நார்வே எங்களுடன் கண்டிப்பாக விவாதிக்க வேண்டும் என்றும் இலங்கைஅரசு கூறியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications