உள்ளாட்சி தேர்தல்: அதிக சீட்வேண்டும்-பாமக
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்:
உள்ளாட்சித் தேர்தலில் பாமகவுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர்ஜி.கே.மணி கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்ட பாமக செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜி.கே.மணி பின்னர் செய்தியாளர்களிடம்பேசினார். அப்போது, சட்டசபைக்கு திடீர் தேர்தல் வரும் என மக்களை திசை திருப்பும வகையில் பேசி வருகிறதுஅதிமுக. ஆனால் 5 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தேர்தல் வரும், ஐந்து ஆண்டுகளும் திமுக ஆட்சிதான்நடைபெறும். இந்த அரசுக்கு பாமகவின் நிபந்தனையற்ற ஆதரவு தொடரும்.உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும். சட்டசபைத் தேர்தலைப் போலவே பெருவாரியானஇடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும்.
கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கூடுதல் இடங்களை எதிர்பார்க்கின்றன. அதேபோல பாமகவும்எதிர்பார்க்கிறது. திமுக தலைவர் கருணாநிதி ஒதுக்கித் தருவார் என நம்புகிறோம்.
சட்டசபைத் தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் அதிமுகவுக்கு அடி விழும். ஆனால் இம்முறை பலத்த அடிகிடைக்கும் என்றார் ஜி.கே.மணி.












Click it and Unblock the Notifications