ஆஸி குடியுரிமை- இனி ஆங்கில டெஸ்ட் கட்டாயம்
கான்பெரா:
இனிமேல் ஆஸ்திரேலிய குடியுரிமை கோருவோர் அந் நாடு நடத்தும் ஆங்கில மொழிதேர்வில் தேறியாக வேண்டும்.
ஆஸ்திரேலிய பிரதமர் ஜான் ஹோவர்ட் கூறுகையில்,ஆஸ்திரேலிய பிரஜைகளாக விரும்புவோருக்கு இந்த நாட்டின் மொழியும், வரலாறும்தெரிந்திருக்க வேண்டியது அவசியம். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அனைவரையும்இணைக்கும் ஒரே வழி ஆங்கில மொழிதான்.
எனவேதான் ஆங்கில அறிவு இருப்பவர்களுக்கே குடியுரிமை என்ற முடிவை எனதுஅரசு எடுத்துள்ளது. அதேபோல ஆஸ்திரேலியாவின் வரலாறையும் குடியுரிமைகோருவோருக்கு தெரிந்திருக்க வேண்டும்.
இந்த நாட்டின் பிரஜைகளாக விரும்புவோருக்கு இந்த நாட்டின் வரலாறு தெரிந்திருக்கவேண்டியது அவசியம்தானே? அதை தெரிந்து கொள்வதில் அவர்களுக்கு சிரமம்இருக்காது என்று நம்புகிறேன்.
குடியுரிமைக்கு விண்ணப்பிக்க 4 ஆண்டுகள் ஆஸ்திரேலியாவில் வசித்திருக்கவேண்டும் என்ற தற்போதைய விதிமுறையை 3 ஆண்டுகளாக குறைக்கவும் எனதுஅரசு மடிவு செய்துள்ளது என்றார் ஹோவர்ட்.
ஆஸ்திரேலிய குடியுரிமை கோரி விண்ணப்பிப்போருக்காக தற்போது ஒரு ஆங்கிலத்தேர்வு உள்ளது. கடந்த 1950ம் ஆண்டு முதல் இது அமலில் உள்ளது. ஆனால் இந்ததேர்வு ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கிடையாது.
ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ஆங்கிலத் தேர்வை குடியுரிமைகோரும் அனைத்து நாட்டவருமே சந்தித்தாக வேண்டும்.ஆஸ்திரேலியாவில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளைச்சேர்ந்தவர்கள்தான். நான்கில் ஒருவர் வெளிநாட்டுக்காரராக இருக்கிறார்.
கடந்த 1945ம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலியாவில் 60 லட்சம் பேர்ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ளனர். 2006-07ல் 1,44,000 பேருக்கு குடியுரிமைவழங்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் சமீப காலமாக பல்வேறு பிரச்சினைகள் தலை தூக்கி வருகின்றன.இதை தடுக்கும் முகமாகவே புதிய ஆங்கிலத் தேர்வை அந்நாட்டு அரசுஅறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிட்னி கடற்கரையோர பகுதிகளில் முஸ்லீம்களுக்கும்,வெள்ளை இனத்தவர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. இதுபோன்ற இனப்பிரச்சினைகளுக்கு ற்றுப்புள்ளி வைக்கும் முகமாகவே இந்த தேர்வைஅறிமுகப்படுத்துவதாக அரசு கூறுகிறது.
ஹோவர்டின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பும் எழுந்துள்ளது. இது இன வெறிநடவடிக்கை என்று பலர் விமர்சித்துள்ளனர். ஆஸ்திரேலிய கிரீன் கட்சி எம்.பியானகெர்ரி நெட்டில் கூறுகையில்,
இது அரசியல் உள்நோக்கம் கொண்ட முடிவு. அரசியல் லாபத்துக்காக இதுபோன்றகுறுகிய நோக்கத்துடன் கூடிய முடிவுகளை அறிவிப்பதை ஹோவர்ட் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சாடியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications