குடி இல்லா தமிழகம்: ராமதாஸ் ஆசை

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை:

குடியில்லா தமிழகத்தை காண்பதற்கு பாமக எல்லா நடவடிக்கையும் மேற்கொள்ளும் என பாமக நிறுவனர் டாக்டர்ராமதாஸ் கூறியுள்ளார்.

நாகை மாவட்ட பாமக செயற்குழு கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ராமதாஸ்நிருபர்களிடம் பேசுகையில்,

காவிரி டெல்டாவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை இந்த மாதமே திறக்க வேண்டும். நெல்கொள்முதல் செய்யும்போது ஈரப்பதம் என்ற வார்த்தைக்கே இடம் இருக்க கூடாது. விவசாயிகள் கொண்டு வரும்நெல்லை சன்ன ரகம், மோட்டா ரகம் என்று பார்க்காமல் தங்கு தடையின்றி வாங்க வேண்டும். விவசாயிகளுக்குகட்டுபடியான விலை கிடைக்க நெல்லுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும்.

காவிரி நீர் பிரச்சனையில் நடுவர் மன்ற தீர்ப்பு விரைவில் வெளிவர உள்ளது. தீர்ப்பு வெளிவருவது முக்கியமல்ல.அதை அமல்படுத்த உரிய சட்ட வழிமுறைகளை உருவாக்க வேண்டும். என்ஜினீயர்கள், அரசியல் சட்டவல்லுனர்கள், மூத்த அறிஞர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்து அந்த குழுவின் அறிக்கையைஅனைத்துக் கட்சி கூட்டத்தில் விவாதித்து ஒருங்கிணைந்த கருத்தை ஏற்படுத் வேண்டும்.

காவிரி பிரச்சனையில் அரசியலுக்கு வேலை இருக்க கூடாது. 1991ல் வெளிவந்த காவிரி நடுவர் மன்றஇடைக்கால தீர்ப்புக்கு ஏற்பட்ட நிலைமை இந்த தீர்ப்புக்கும் வந்து விடக்கூடாது.

விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் போது பணதட்டுப்பாடுஎன்ற பேச்சுக்கே இடம் இருக்க கூடாது. டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று நான் வலியுறுத்தியகோரிக்கையில் எந்த மாற்றம் இல்லை. குடியில்லா தமிழகத்தை காண்பதற்கு பாமக எல்லா நடவடிக்கையும்மேற்கொள்ளும்.

ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியையும் மாவட்ட தலைநகராக்க வேண்டும் என்ற பாமக தேர்தல்அறிக்கையின்படி மயிலாடுதுறை விரைவில் மாவட்ட தலைநகராகும் நிலை உருவாகியுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் சுழற்சி முறை கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இந்தசுழற்சி முறையால் மிகப்பெரும் பாதிப்படைவது பாமக தான் என்றார் ராமதாஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+