நெல்லையில் நாளை தேமுதிக முப்பெரும் விழா
திருநெல்வேலி:
விஜய்காந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முப்பெரும் விழா நாளை திருநெல்வேலியில் நடக்கிறது.இதையொட்டி மிக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதுரையில் கட்சி தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைவதையொட்டி இந்தவிழாவுக்கு விஜய்காந்த் ஏற்பாடு செய்துள்ளார்.இந்த தினத்தை வறுமை ஒழிப்பு தின விழா, தீவிர உறுப்பினர் சேர்க்கை விழாவாகவும்தேமுதிக கடைபிடிக்கிறது.
இதையொட்டி நெல்லை நகர் முழுக்க தோரணங்களும் வரவேற்பு வளைவுகளும்கொடிகளுமாக காட்சியளிக்கின்றன. விஜய்காந்தின் போஸ்டர்களும், கட்-அவுட்களும்கண்ணைப் பறிக்கின்றன.
விழாவுக்கு வரும் விஜய்காந்தை வரவேற்க மிக பிரமாண்டமான ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.
இந்த விழாவுக்கு நெல்லை மாவட்ட தேமுதிக தலைவர் சீதாபதி ராமநாதன் தலைமைதாங்குகிறார். விஜய்காந்த் விழா பேருரை ஆற்றுகிறார்.
கட்சியின் பொதுச் செயலாளர் ராமு வசந்தன், அவைத் தலைவர் பண்ருட்டிராமச்சந்திரன், பொருளாளரான டைரக்டர் ஆர். சுந்தர்ராஜன், கட்சியில் புதிதாக சேர்ந்தமாஜி அதிமுக மந்திரி கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசுகின்றனர்.
விழாவையொட்டி மாலையில் கட்சியின் கலை இலக்கிய அணி சார்பில் கலைநிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
விழாவுக்கு வரும் விஜய்காந்தை வரவேற்க பிரமாண்டமான ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.
இந்த விழாவில் நெல்லை, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர்,ராமநாதபுர், தேனி, திண்டுக்கல் மாவட்ட கட்சி நிர்வாகிகள் மட்டும் பங்கேற்றால்போதும் என விஜய்காந்த் அறிவித்துள்ளார்.
ஆனாலும் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பஸ்கள், லாரிகள், வேன்கள்,கார்களில் தொண்டர்களும் நிர்வாகிகளும் நெல்லையில் குவியத் தொடங்கிவிட்டனர்.
விஜயகாந்த் திராவிடன் இல்லை முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதற்கு நெல்லைவிழாவில் பதிலளிப்பதாக விஜயகாந்த் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி உண்டா இல்லையா என்பது குறித்தும் இந்தமாநாட்டில் விஜய்காந்த் விளக்குவார் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications