ஏமன் மலையாளிகள் சங்கம் மீது இந்திய தூதர் சரமாரி புகார்!
டெல்லி:
ஏமன் நாட்டு மலையாளிகள் நலச் சங்கம், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக அந்நாட்டுக்கான இந்தியத்தூதர் ஏ.கருப்பையா புகார் தெரிவித்துள்ளார்.
ஏமன் நாட்டுக்கான இந்தியத் தூதராக இருப்பவர் ஏ.கருப்பையா. இவர் மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்குஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஏமன் நாட்டு மலையாளிகள் நலச் சங்கம் பல்வேறு முறைகேடுகளில்ஈடுபடுவதாகவும், அந்த சங்கத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.கருப்பையா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
ஏமன் மலையாளிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் என்னை சந்தித்து, போலியான நர்சிங் பயிற்சி சான்றிதழைவைத்துள்ள கேரளாவைச் சேர்ந்தவர்களுக்கும் அட்டஸ்டேஷன் செய்து தருமாறு வலியுறுத்தினர். நான் அதற்குமறுத்து விட்டேன்.
அதற்கு அவர்கள், நீங்கள் இந்திய குடியரசுத் தலைவரால் இப்பொறுப்பில் நியமிக்கப்பட்டவர். உங்களை யாரும்கேள்வி கேட்க முடியாது. எனவே இதுபோல செய்வதால் உங்களுக்குப் பிரச்சினை வராது என்று என்னைசமாதானப்படுத்தப் பார்த்தனர். ஆனால் நான் முடியவே முடியாது என்று கூறி விட்டேன்.
மேலும், போலியான சான்றிதழ் மூலம் ஆய்வக உதவியாளராக வேலைக்கு சேர்ந்திருந்த பெட்டி வர்கீஸ் என்றகேரளப் பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஏமன் அதிகாகிகளுக்கு நான் பரிந்துரைத்தேன்.
இதையடுத்து என் மீது புகார் தெரிவித்து வெளிநாடு வாழ் இந்தியர் நல அமைச்சகத்திற்கு மலையாளிகள் சங்கம்கடிதம் எழுதியுள்ளது. என்னை அவர்கள் இஷ்டத்திற்கு வளைக்க முடியாத விரக்தி, கோபத்தில் தான் இந்தப்புகார் கடித்ததை அவர்கள் அனுப்பியுள்ளனர்.
ஏமன் மலையாளிகள் சங்கத்துடன், போலி இந்திய ஏஜென்டுகள் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளனர். இவர்கள்மூலம் போலியான சான்றிதழ்களை கொடுத்து நிறைய பேர் ஏமனில் வேலைக்கு சேர முயற்சிக்கின்றனர். ஆனால்இதை நான் அனுமதிக்க முடியாது. அப்படி செய்தால் இந்தியாவிலிருந்து வருபவர்கள் எல்லாம்போலியானவர்கள் என்ற கெட்ட பெயர் ஏற்பட்டு விடும்.
ஏமனில் மரணம் அடையும் இந்தியர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்புவதற்குக் கூட பணம்பெற்றுக்கொண்டுதான் உதவி செய்கிறார் மலையாளிகள் சங்க நிர்வாகிகளில் ஒருவர். அந்த அளவுக்கு பணத்தைமட்டுமே குறியாகக் கொண்டு ஏமன் மலையாளிகள் சங்கம் செயல்படுகிறது.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் நாங்கள், எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், தனிப்பட்டஎந்த ஒரு சங்கத்துடனும் நீங்கள் தொடர்பு கொள்ளக் கூடாது, தூதரகத்துடன் மட்டுமே தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டோம். இது மலையாளிகள் சங்க நிர்வாகிகளுக்கு பெரும் ஆத்திரத்தைக்கொடுத்தது.
இந்த சங்கத்தின் நிர்வாகிகள் முறைகேடான வகையில் மட்டுமே செயல்பட்டு வருகிறார்கள். அவர்களுக்குசாதகமாக நடப்பவர்களுக்கு மட்டுமே உதவுகிறார்கள். சட்டவிரோதமான காரியங்கள் பலவற்றில்ஈடுபடுகிறார்கள்.
இந்த சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான நசார் முகம்மது என்பவர், தனது மதத்தைசார்ந்தவர்களுக்கு மட்டுமே வேலை வாங்கிக் கொடுக்கிறார். அவருக்கு சங்கம் முழு ஆதரவாக இருக்கிறது.
உண்மையில் இது நலச் சங்கமே கிடையாது. அந்தப் பெயரை வைத்துக் கொண்டு பிணங்கள் மீதும் பணம்சம்பாதித்துக் கொண்டுள்ளனர்.
இந்த சங்கத்தின் நிர்வாகிகளுக்கு இந்தியத் தூதரகம் மீது அதிருப்தி நிலவுவதற்கு காரணம், கல்வி சான்றிதழ்,நர்சிங் சான்றிதழ் உள்ளிட்ட தகுதிச் சான்றிதழ்கள் உண்மையானவையா, போலியானவையா என்பதை நாங்கள்பரிசோதிப்பதால் தான். தூதரகம் இப்படி செய்வதால் நசார் முகம்மது போன்ற போலி ஏஜென்டுகள்பாதிக்கப்படுவதை ஏமன் மலையாளிகள் விரும்பவில்லை என்று கூறியுள்ளார் கருப்பையா.
இதற்கிடையே கருப்பையா மீது புகார் கூறி ஏமன் மலையாளிகள் நலச் சங்கம் வெளிநாடு வாழ் இந்தியர்நலத்துறைக்கு (இந்த துறையின் அமைச்சராக இருப்பவர் கேரளாவைச் சேர்ந்த வயலார் ரவி என்பதுகுறிப்பிடத்தக்கது) அனுப்பியுள்ளது. இந்தக் கடிதம் மீது நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவு அமைச்சகத்திற்குவெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை பரிந்தரைத்துள்ளது.
இருப்பினும் கருப்பையா மீது நடவடிக்கை எடுக்க வெளியுறவுத்துறை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.இன்னும் சில மாதங்களில் கருப்பையா ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாளிகள் சங்கத்திற்கும், இந்தியத் தூதரகத்திற்கும் ஏற்பட்டுள்ள இந்த மோதல் வெளியுறவு அமைச்சகவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications