அமைச்சர் லீலை-விசாரணையில் லட்சுமி அதிருப்தி
சென்னை:
விமானத்தில் தனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த கேரள அமைச்சர் குறித்த விசாரணை அறிக்கைய தனக்குத்தரவில்லை என் கேரள அரசு மீது லட்சுமி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
டிவி நடிகை லட்சுமி கோபகுமார் சென்னையில் இருந்து கொச்சிக்கு விமானத்தில் சென்ற போது அவரிடம் கேரளபொதுப் பணித்துறை அமைச்சர் ஜோசம் செக்ஸ் தொல்லை கொடுத்ததார். இது பற்றி அம் மாநில ஐஜி சந்தியாவிசாரணை நடத்தி அறிக்கை கொடுத்தார். இதைத் தொடர்ந்து ஜோசப் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.ஆனால் லட்சுமி இந்த பிரச்சனையில் கேரள அரசின் நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என்று கூறியுள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது,
விமானத்தில் எனக்கு நேர்ந்த கொடுமை பற்றி நீதி விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இதில்எனக்கு நியாயம் கிடைக்காமல் போகலாம். நீதி விசாரணைக்கு பிறகும் போலீஸ் விசாரணை நடத்துவார்கள். இதுதேவை இல்லாத வேதனையைத் தான் தரும். இதை நானும் என் குடும்பத்தினரும் விரும்பவில்லை.
இது தொடர்பாக நான் கேரள முதல்வருக்கு கடிதம் எழுதினேன். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. நீதிவிசாரணை கோரி நாங்கள் எந்த வேண்டுகோளும் விடுக்கவில்லை. எங்கள் சம்மதம் பெறாமலே நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். என்றாலும் ஐஜி.சந்தியா விசாரணை நடத்திய போது நான் முழு ஒத்துழைப்புகொடுத்தேன்.
ஐஜி சந்தியாவின் அறிக்கை நகலை அமைச்சர் ஜோசப்புக்கு கொடுத்தனர். ஆனால் அந்த அறிக்கை நகல்இதுவரை எனக்கு தரப்படவில்லை. கேரள அரசின் இத்தகையை நடவடிக்கைகள் எங்கள் குடும்பத்தினருக்குகவலை அளித்துள்ளது.
இந்த பிரச்சனையில் ஏதோ சதி நடப்பது போல தெரிகிறது. கேரள அரசு உண்மையில் இந்த பிரச்சனையைநேர்மையாக அணுகினால் முதலில் ஜோசப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இதுவரை எந்தவழக்கும் பதிவு செய்யப்படவில்லை என அவர் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications