பலூனில் பறந்து போட்டோ: கல்பாக்கத்தில் பரபரப்பு
கல்பாக்கம்:
பலூனில் பறந்தபடி கல்பாக்கம் அணு மின் நிலைய பகுதியில் புகைப்படம் எடுத்த பிரான்ஸ் நாட்டுக்காரரால்பரபரப்பு ஏற்பட்டது.
கல்பாக்கம் அணு மின் நிலையப் பகுதியில் பாதுகாப்பு உச்சகட்டத்தில் உள்ளது. தீவிரவாதிகள் தாக்குதல் அபாயம்காரணமாக இந்த அளவுக்கு பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வப்போது அங்கு ஊரடங்கு உத்தரவும்அமல்படுத்தப்படுகிறது.இப்படி உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தின் கீழ் உள்ள கல்பாக்கம் அணு மின் நிலையப் பகுதியில் நேற்று ஒருவெளிநாட்டுக்காரர் பலூனில் பறந்தபடி வந்தார்.
பலூனில் இருந்தபடியே அவர் புகைப்படம் எடுத்தார். இதைப் பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரைஎச்சரித்து கீழே இறங்கச் செய்தனர். அவர் இறங்கி வந்தவுடன் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் ராணுவம், மத்திய உளவுத்துறை, போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரதுபெயர் நிக்கோலஸ், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரிய வந்தது.
சர்வதேச புகைப்பட நிபுணரான அவர், மாமல்லபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த நினைவுத் சின்னங்களைபுகைப்படம் எடுத்த அவர் இதற்காக மத்திய அரசின தொல்பொருள் துறையிடம் முறையாக அனுமதியும்வாங்கியிருந்தார்.
இதுதொடர்பாக அவர் ஆவணங்களை அதிகாரிகளிடம் காட்டினார். ஆனால் கல்பாக்கம் அணு மின் நிலையத்தைஅவர் படம் எடுக்கவில்லை எனத் தெரிந்தது. இதையடுத்து கடுமையாக எச்சரித்த பின்னர் அந்த புகைப்படநிபுணரை அதிகாரிகள் விடுவித்தனர்.
இந்த சம்பவம் காரணமாக அணு மின் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications