மறக்க முடியாத காஸ்ட்ரோ சந்திப்பு: மன்மோகன்
பிராங்பர்ட்:
ஹவானாவிலிருந்து நாடு திரும்பும் வழியில் கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோவை சந்தித்ததை எனது வாழ்நாளில்மறக்க முடியாது என்று பிரதமர்மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
கியூபா தலைநகர் ஹவானாவில் அணி சேரா நாடுகள் அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங்கலந்து கொண்டார். மாநாட்டை முடித்துக் கொண்டு தனி விமானம் மூலம் நாடு திரும்பினார் பிரதமர்.வரும் வழியில் விமானத்தில் இருந்தபடியே செய்தியாளர்களை சந்தித்த மன்மோகன் சிங் பல்வேறுகேள்விகளுக்குப் பதில் அளித்தார். கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோவுடனான சந்திப்பு குறித்து அவர் கூறுகையில்,இதை எனது வாழ்நாளில் மறக்க மாட்டேன்.
இந்த சந்திப்பு உணர்ச்சிகரமாக இருந்தது. நமது காலத்தில் வாழும் ஒரு மிகப் பெரிய மனிதரை சந்திக்க முடிந்ததுஎனக்கு பெருமிதத்தைக் கொடுத்துள்ளது.
காஸ்ட்ரோவுடன் நான் 40 நிமிடங்கள் பேசினேன். அப்போது இந்தியாவுக்கும், கியூபாவுக்கும் இடையிலானநட்பை நினைவு கூர்ந்தார் காஸ்ட்ரோ.
ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோருடன் தனக்கிருந்த நட்பு குறித்து உணர்ச்சிப் பெருக்குடன்விவரித்தார் காஸ்ட்ரோ.
அவரது உடல் நலம் குறித்து விசாரிக்கவும், விரைவில் நலம் பெற வாழ்த்தவுமே நான் காஸ்ட்ரோவை சந்திக்கச்சென்றேன். ஆனால் அவர், மிக விரிவான உரையாடலை மேற்கொண்டார்.
இந்தியாவின் பொருளாதார பிரச்சினைகள், நமது நாட்டின் உணவுப் பிரச்சினை, மின்சார உற்பத்தி, நமது மின்சாரசேமிப்பு முறைகள் உள்ளிட்டவை குறித்து அவர் விரிவாக கேட்டறிந்தார்.
மனித வள மேம்பாடு, எரி சக்தி சேமிப்பு, உணவு, கல்வி ஆகிய துறைகளில் கியூபா மேற்கொண்டு வரும்நடவடிக்கைகளையும் அவர் என்னிடம் விளக்கினார்.
மொத்தத்தில் இந்த சந்திப்பு எனக்கு மகிழ்ச்சியையும், திருப்தியையும் கொடுத்தது. காஸ்ட்ரோ இன்னும்முழுமையாக சரியாகவில்லை. பார்ப்பதற்கு பலவீனமாகத்தான் இருக்கிறார். ஆனால் தனது உடல் நலபலவீனத்தை வெளிக்காட்டாமல்என்னுடன் 40 நிமிட நேரமும் அமர்ந்தபடியே பேசியதை நான் ஆச்சரியத்துடன் கவனித்தேன்.
அவரது பேச்சில் எந்த சோர்வும் காணப்படவில்லை. இன்னும் 2 நாள் கழித்து அணி சேரா அமைப்பின் மாநாடுநடந்திருந்தால் நிச்சயம் நான் கலந்து கொண்டிருப்பேன் என்று என்னிடம் அவர் தெரிவித்தார் என்றார்மன்மோகன் சிங்.
பின்னர் பேச்சு ஐ.நா. பொதுச் செயலாளர் தேர்தல் பக்கம் திரும்பியது. இந்திய வேட்பாளர் சசி தரூரின் வெற்றிவாய்ப்பு குறித்து மன்மோகன் சிங் கருத்து தெரிவிக்கையில், டாக்டர் சசி தரூர் ஐ.நா. பொதுச் செயலாளர்தேர்தலில் வெற்றி பெறுவார் என நம்பிக்கை உள்ளது. அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் நிச்சயம் சிறப்பாகசெயல்படுவார்.
கொடுத்த பணியை செவ்வனே செய்வதில் சசி தரூர் தனது திறமையை ஏற்கனவே நிரூபித்துள்ளார். எனவே ஐ.நா.பொதுச் செயலாளர் பதவியிலும் அவர் திறம்பட பணியாற்றுவார்.
சசி தரூரின் போட்டி குறித்து அணி சேரா நாடுகள் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு நாட்டுத்தலைவர்களுடன் நான் விவாதித்தேன். சசி தரூர் மிகத் திறமையானவர் என்று அவர்களிடம் தெரிவித்தேன்.
இது மிகக் கடுமையான போட்டி தான். முதல் முறையாக நாம் துணிச்சலுடன் களத்தில் குதித்துள்ளோம். சர்வதேசஅரங்கில் எந்தவிதமான பொறுப்பையும் வகிக்கும் தகுதி நமக்கு உள்ளது என்பதை இந்தப் போட்டியின் மூலம்உலகுக்குத்தெரிவித்துள்ளோம். ஒரே நாளில் நமக்கு வெற்றி கிடைத்து விடாது. பல கடுமையான சவால்களை நாம் சந்திக்கவேண்டும் என்றார் சிங்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications