ஒரே ஒரு முறை முதல்வராக்கிப் பாருங்கள்: விஜயகாந்த்
திருநெல்வேலி:
என்னை ஒரே ஒரு முறை முதல்வர் பதவியில் அமர்த்திப் பாருங்கள். பிறகு 50 கட்சிகள் சேர்ந்து வந்தாலும்என்னை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்று தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேமுதிக ஆரம்பித்ததன் முதலாமாண்டு நிறைவு விழாவை திருநெல்வேலியில் பிரமாண்ட பொதுக் கூட்டத்துடன்தேமுதிக நேற்று கொண்டாடியது. இந்த பொதுக் கூட்டத்தில் விஜயகாந்த் சிறப்புரை ஆற்றினார்.பெரும் ஜனத்திரளுக்கு மத்தியில் விஜயகாந்த் பேசுகையில், சொந்தப் பணத்தில் தான் கட்சியை தொடங்கினேன்.இப்போதும் சொந்தக் காசை போட்டுத் தான் கட்சி நடத்தி வருகிறேன். எனவே தான் என்னால் லஞ்சம், ஊழலைஒழிக்க முடியும் என தைரியமாக பேச முடிகிறது.
நாம் சொன்ன வாக்குறுதிகளைத் தான் இன்று திமுக அப்படியே காப்பியடித்து நிறைவேற்றி வருகிறது. நான்சொல்வதாலேயே இத்தனை நன்மைகள் மக்களுக்குக் கிடைக்கின்றன என்றால் ஆட்சியை என்னிடம் ஒரு முறைகொடுத்துப் பாருங்கள். அப்புறம் என்னவெல்லாம் கிடைக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
என்னை ஒரே ஒருமுறை முதல்வர் பதவியில் அமர்த்திப் பாருங்கள். அப்புறம் 50 கட்சிகள் சேர்ந்து வந்தாலும்,என்னை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது.
மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் நாம் தனித்துத் தான் போட்டியிடுவோம்.யாரும் என்னை காசு கொடுத்து விலைக்கு வாங்க முடியாது. மக்களுடனும், தெய்வத்துடனும் தான் நான்கூட்டணி வைத்துள்ளேன்.
மக்கள் நலன் குறித்துப் பேசும் திமுகவும், அதிமுகவும் தனியாகப் போட்டியிடத் தயாரா? அப்படி போட்டியிட்டுக்காட்டட்டும், அவர்களது செல்வாக்கு என்ன என்பது வெட்ட வெளிச்சமாகி விடும்.
இத்னைை காலம் கவர்ச்சியை நம்பி மக்கள் ஏமாந்தது போதும், இனிமேல் கவர்ச்சி அரசியலை ஆதரிக்காதீர்கள்,கவர்ச்சியை நம்பி ஓட்டுப் போடாதீர்கள் என முதல்வர் கருணாநதி கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்தபோதும், அவரது தயவில் திமுக ஆட்சியை பிடித்த போதும் கவர்ச்சி கண்ணுக்குத்தெரியவில்லையா? உங்களுக்கான பொன் விழாவில் நான் கலந்து கொண்டபோது கவர்ச்சி தெரியவில்லையா?கலர் டிவி கொடுப்பது கவர்ச்சி இல்லையா? 2 ஏக்கர் நிலம் கொடுப்பது கவர்ச்சி இல்லையா?
என்னை நன்றி கெட்டவன் என்கிறார் கருணாநதி. நானா நன்றி கெட்டவன்? என்னைப் பற்றி என்னவேண்டுமானாலும் பேசிக் கொள்ளுங்கள். நான் கவலைப்படப் போவதில்லை.
திராவிடம் என்பது ஒரு இனம். அண்ணா கட்சி தொடங்கிய போது திராவிட நாடு, திராவிடனுக்கே என்றுமுழங்கினார். திராவிடம் என்பது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது.இது கருணாநிதிக்கும் தெரியும்.
தேசியத்தில் திராவிடத்தை உள்ளடக்கிய கொள்கையைக் கொண்டுதான் எனது கட்சிக்கு தேசிய முற்போக்குதிராவிட கழகம் என்று பெயர் சூட்டினேன் என்றார் விஜயகாந்த்.
இந்த பொதுக் கூட்டம் தொடர்பான தேமுதிகவினரின் விளம்பரங்களில் விஜயகாந்த் பெயருக்கு முன்புதிராவிடன் என்ற பட்டத்தை சேர்த்திருந்தனர். அதேபோல நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் திராவிடன் என்றுகூப்பிட்டே பேசினர்.
நெல்லை மாவட்ட கட்சி சார்பில் வெள்ளி முரசு விஜயகாந்துக்கு வழங்கப்பட்டது. அதேபோல வெள்ளிசெங்கோலும் நெல்லை நகர கழகம் சார்பில் வழங்கப்பட்டது.
தேமுதிக பொதுக் கூட்டத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பெரும் திரளான தொண்டர்கள் நெல்லையில்கூடியதால் நகரம் முழுவதும் தேமுதிக தலைகளாகவே காணப்பட்டது. நெல்லை நகரம் திக்குமுக்காடிப் போனது.












Click it and Unblock the Notifications