ஐஐஎம் மாணவர்களை அசத்திய வாத்யார் லாலு
அகமதாபாத்:
அகமதாபாத் இந்திய நிர்வாகவியல் மைய (ஐஐஎம்) மாணவர்களுக்கு 3 மணி நேரம் பாடம் நடத்தியும், அவர்கள்கேட்ட கேள்விகளுக்கு லாவகமாக பதில் அளித்தும் அசத்தினார் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்.
நஷ்டத்தில் மூழ்க இருந்த ரயில்வே துறையை லாபகரமான துறையாக மாற்றியது எப்படி என்பது குறித்து ஐஐஎம்மாணவர்களுக்கு லாலு பிரசாத் பாடம் நடத்தினார்.ஐஐஎம் மாணவர்களே ஆச்சரியப்படும் வகையில் படு லாவகமாக பாடம் நடத்தி அசத்தி விட்டார் லாலு. தனதுதலைமையில் இந்திய ரயில்வே எப்படி லாபகரமாக செயல்படுகிறது, பயணிகள் கட்டணத்தை ஏற்றாமல் எப்படிலாபம் சம்பாதிக்க முடிந்தது, அதன் சூட்சுமம் என்ன என்பது குறித்து கிட்டத்தட்ட 3 மணி நேரம் மாணவர்களுக்குவிளக்கினார் லாலு.
உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையங்களை இந்தியாவில் உருவாக்குவது, சுத்தமான ரயில்கள், நவீன ரயில்நிலையங்கள், பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தருவது குறித்த தனது எதிர்கால லட்சியங்களையும்மாணவர்களிடம் விளக்கினார் லாலு.
மாணவர்களும் படு ஆர்வமாக பல்வேறு கேள்விகளை லாலுவிடம் கேட்டனர். அதற்கு தனக்கே உரிய ஸ்டைலில்அசத்தலான பதிலை அளித்து மாணவர்களை ஆச்சரியப்படுத்தினார் லாலு. காமெடியாக பேசப் போகிறார் எனநினைத்திருந்த மாணவர்களுக்கு, நிர்வாகத் திறமைகளை எப்படி வெளிப்படுத்துவது என்பது குறித்து படுசீரியஸாக லாலு பேச பேச பெரும் ஆச்சரியமாகப் போய் விட்டதாம்.
ஐஐஎம் மாணவர்களிடையே தன்னை பேச அழைத்தற்கு சந்தோஷம் தெரிவித்த லாலு, இதை கெளரவிக்கும்வகையில் அகமதாபாத் ஐஐஎம் வளாகத்தில் ரயில்வே குறித்த படிப்புக்கு ஒரு பிரிவை ஏற்படுத்துவதாகவும்அறிவித்தார். இதற்கு ரயில்வே அமைச்சகம் முழு நிதியுதவி செய்யும்.
மேலும் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் விவசாயிகளுக்கான மையங்களை ஏற்படுத்தத்திட்டமிட்டுள்ளதாகவும் பின்னர் செய்தியாளர்களிடம் லாலு தெரிவித்தார். மொத்தம் 7,500 மையங்கள்ஏற்படுத்தப்படவுள்ளன. விவசாயிகள், தங்களது உற்பத்திப் பொருட்களை இந்த மையம் மூலம் விற்கவும்,ரயில்களில் அனுப்பி வைக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என லாலு தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications