கொசுவை எதிர்க்கும் ஜெ: ஸ்டாலின் கிண்டல்
விழப்புரம்:
மக்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாத வகையில் திமுக ஆட்சி நடந்து வருவதால் சிக்குன் குனியாவைகாரணமாகச் சொல்லி கொசுவை எதிர்த்து ஜெயலலிதா போராட்டம் நடத்துகிறார் என உள்ளாட்சித் துறைஅமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
விழப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் நடந்த திமுக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில்ஸ்டாலின் பேசியதாவது,தேர்தலில் கொடுத்த வாக்குறுதி, உறுதிமொழிகளை முதல்வர் கருணாநிதி 100 நாள்களில் நிறைவேற்றிகாட்டியுள்ளார். தேர்தல் வாக்குறுதிப்படி இலவச கலர் டிவி வழங்கப்படுகிறது. இன்னும் இரண்டரை ஆண்டுகளில்தமிழகம் முழுவதும் கலர் டிவி வழங்கப்படும்.
டிவி பழுதடைந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் அவர்கள் பழுது நீக்கி தருவார்கள்.அக்டோபர் 2ம் தேதி முதல் படித்த இளைஞர்களுக்கு உதவித் தொகை திட்டமும், பொங்கல் திருநாளன்று முதல்வீட்டுக்கு வீடு காஸ் அடுப்பு வழங்கும் திட்டமும் தொடங்க இருக்கிறது.
சிக்குன் குனியாவை கட்டுப்படுத்த மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் ரூ.12 கோடி மதிப்பில் நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாத வகையில் திமுக அரசு ஆட்சி செய்து வருகிறது.
அதனால் வேறு வழியில்லாமல் கொசுவை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போராட்டம் நடத்துகிறார்என்றார்.












Click it and Unblock the Notifications