மசாஜ் தொழிலாளியை சுட்ட பெங்களூர் கும்பல்!

Subscribe to Oneindia Tamil

ஓகனேக்கல்:

தர்மபுரி மாவட்டம் ஓகனேக்கலில், மசாஜ் செய்யும் தொழிலாளியை துப்பாக்கியால்சுட்டுத் தள்ளிய பெங்களூரைச் சேர்ந்த 15 பேரை போலீஸார் பிடித்து விசாரித்துவருகிறார்கள்.

ஓகனேக்கல் அருவிப் பகுதியில் மசாஜ் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்குமாரசாமி. நேற்று ஓகனேக்கலுக்கு பெங்களூரைச் சேர்ந்த 15 பேர் கொண்டகுழுவினர் சுற்றுலா வந்துள்ளனர்.

குமாரசாமியிடம் மசாஜ் செய்ய வேண்டும் என்று சொல்லி ஒரு படகில் அழைத்துச்சென்றனர். கர்நாடக எல்லையில் உள்ள மாறுகொட்டாய் பகுதிக்கு குமாரசாமியைஅழைத்துச் சென்ற அந்தக் கும்பல், மசாஜ் செய்து கொண்டது.

அப்போது அக் கும்பலில் இருந்த வெங்கட்ராம ரெட்டி என்பவர், குமாரசாமியைதிடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் குமாரசாமியின் முதுகில் குண்டுபாய்ந்தது.

துடிதுடித்து அவர் விழுந்ததைப் பார்த்ததும் அக்கும்பல் அங்கிருந்து தப்பியது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குமாரசாமியை தமிழக பகுதிக்கு தூக்கி வந்து பின்னர்தர்மபுரி அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர்.

இதுகுறித்து ஓகனேக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாகி ஓடிய15 பேரையும் வளைத்துப் பிடித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அவர்களிடம்விசாரணை நடந்து வருகிறது.

15 பேரும் முழு போதையில் இருந்தபோது மசாஜ் செய்து விட்டுள்ளார் குமாரசாமி.போதையும் திமிரும் அதிகமானதால் ரெட்டி துப்பாக்கியால் சுட்டுள்ளான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+