ஓடிப் போன லெஸ்பியன் தோழிகள்
புதுச்சேரி:
புதுவை அரியாங்குப்பத்தை சேர்ந்த குமரகுரு (33). இவருக்கும் அமுதா (29) என்பவருக்கும் ஜூலை 13ம் தேதிதிருமணம் நடந்தது. தனியார் லெதர் நிறுவனத்தில் அமுதா வேலை பார்த்து வந்தார்.கடந்த 15ம் தேதி சம்பள பாக்கியை வாங்கி வருவதாக கூறி சென்ற அமுதா வீடு திரும்பவில்லை. இதனால்குமரகுரு மற்றும் அவரது உறவினர்களும் அமுதா வேலை செய்த நிறுவனத்துக்கு சென்று விசாரித்தனர். ஆனால்அங்கு அமுதா வரவே இல்லை என் தெரிந்தது.
பின்னர்தான் வீட்டில் இருந்த 11 பவுன் நகைகளையும் எடுத்துக் கொண்டு அமுதா சென்றுவிட்டது தெரியவந்தது.மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் குமரகுரு.
![]() |
இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தபோது அமுதா மாயமான அதே நாளில் அவருடன் லெதர் நிறுவனத்தில்வேலை பார்த்து வந்த கலாமேரி என்பவரும் காணாமல் போனது தெரிந்தது.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதாவது:
புதுவை கோபால்கடை பேட்டையை சேர்ந்த கலாமேரி (28) கடந்த 2 ஆண்டுகளாக அமுதா வேலை பார்த்தஅதே நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இவருக்கும் விழுப்புரத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் (32) என்பவருக்கும் ஆகஸ்ட் 21ம் தேதி திருமணம்நடந்ததுள்ளது. லெதர் நிறுவனத்தில் வேலை செய்தபோது அமுதாவுடன் கலாமேரிக்கு நட்பு ஏற்பட்டது. இந்தநட்பு இருக்கமாகி கடைசியில் இருவருக்கும் இடையே லெஸ்பியன் உறவு ஏற்பட்டுள்ளது.
![]() |
இதனால் திருமணத்தில் விருப்பமில்லாமல் இருந்துள்ளனர். பெற்றோர்களின் விருப்பத்திற்காக திருமணத்துக்குஒப்புக் கொண்டுள்ளனர். கணவர்களது உறவால் தங்கள் நட்பு முறிந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.ஆடி மாதத்தில் கணவரை பிரிந்து வந்த அமுதா கலாமேரியுடன் அதிக நேரத்தை கழித்திருக்கிறார்.
இதற்கிடையே கலாமேரியை 2வது திருமணம் செய்து கொள்ளும்படி குமரகுருவிடம் அமுதா வற்புறுத்தியுள்ளார்.அதேபோல கலாமேரியும் அமுதாவை திருமணம் செய்து கொள்ள ஆனந்தராஜிடம் கூறியுள்ளார். இருவரின்கணவன்களும் இதை ஏற்கவில்லை.
இந் நிலையில் கடந்த 15ம் தேதி இருவரும் சேர்ந்து வீடுகளை விட்டு ஓடிப் போய்விட்டனர். இவர்கள் எங்குசென்றனர் என்று தெரியவில்லை.
இதுகுறித்து கலாமேரியின் தாய் எல்லம்மாள் கூறுகையில்,
இரண்டு வருஷமாகத்தான் லெதர் கம்பெனியில் எம்பொண்ணு வேலை பார்த்தா. அவளோட வேலை செய்தஅமுதா அடிக்கடி எங்க வீட்டுக்கு வருவாள். இரண்டு பேரும் எப்போதும் ஒண்ணா வெளியில் போவாங்க.முதலில் நட்பா பழகுறாங்கன்னு தான் நினைச்சோம்.
ஆனா, கல்யாணத்துக்குப் பிறகும் அமுதா அடிக்கடி வீட்டுக்கு வருவாள். இங்கேயே தான் ரொம்ப நேரம்இருப்பா. நான் கூட இருவரையும் கண்டிச்சேன். ஆனால் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமானதால்எனது மகளுக்கு உடனே திருமணம் செய்து வைத்தேன்.
கலாமேரிக்கு திருமணம் முடிந்த பிறகும் அமுதா தொடர்ந்து சந்திச்சுக்கிட்டுதான் இருந்தாள். ஒரு நாள்அமுதாவை கடுமையாக கண்டித்து அனுப்பினேன். அதன் பின்னர் கடந்த 15ம் தேதி டெய்லர்கிட்ட ஜாக்கெட்வாங்கிட்டு வர்றதா பொய் சொல்லிட்டு கலாமேரி போனாள். அதன் பிறகு அவள் வரவே இல்லை என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?














Click it and Unblock the Notifications