எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்.. ஜெ
சென்னை:
திமுகவுக்கு ஆதரவாகத் தாவிய மதுரை மேற்குத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.சண்முகம் குறித்த கேள்விக்கு எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய்நன்றி கொன்ற மகர்க்கு என்ற திருக்குறளையே பதிலாக கூறினார் அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா.
அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று காலைசென்னை அதிமுக தலைமைக்கழக அலுவலகத்தில் நடந்தது. கூட்டம் முடிந்த பின்னர்செய்தியாளர்களிடம் ஜெயலலிதா பேசினார்.அப்போது மதுரை மேற்குத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சண்முகம் திமுகவுக்குஆதரவாக செயல்படுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, எந்நன்றிகொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு என்றார்ஜெயலலிதா.
சண்முகத்தை கட்சியை விட்டு நீக்குவீர்களா என்ற கேள்விக்கு, இப்போதைக்கு நான்சொன்னதே பதில். இது ஒரு டிரெயிலர். போகப் போகப் பார்ப்பீர்கள் என்றார்.
தொடர்ந்து ஜெயலலிதா பேசுகையில், மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தல்,உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தோழமைக் கட்சி தலைவர்களை சந்தித்துப்பேசினேன்.
இரு தேர்தல்களிலும் பெருமளவு வெற்றி பெற அயராது பாடுபடுவது எனவும்,கூட்டணிக் கட்சியினர் முழு ஒத்துழைப்பு நல்குவது என்றும் தீர்மானித்துள்ளோம்.
அதிமுக சார்பில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல தோழமைக்கட்சிகளிலும் தனித் தனியாக குழு அமைப்பார்கள். இவர்கள் சந்தித்து இடப் பங்கீடுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவர். பேச்சுவார்த்தையை எவ்வளவு சீக்கிரம்முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் முடிப்பார்கள்.
இன்றைய திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் ஒன்றல்ல, இரண்டல்ல.கடந்த 4 மாதங்களாக சிக்குன்குனியா நோய் தமிழக மக்களை வாட்டி வதைக்கிறது.இதிலிருந்து மக்களை பாதுகாக்க இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திரும்பத் திரும்ப நான் இதை சுட்டிக் காட்டிய பிறகும், எல்லா பத்திரிகைகளும் செய்திவெளியிட்ட பிறகும் இல்லை என்று கூறி வந்தனர் முதல்வரும், மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சரும். தமிழகத்தில் சிக்குன் குனியாவே இல்லை என்றுசட்டசபையில் பேசி பதிவு செய்தார் முதல்வர்.
சில நாட்களுக்கு முன்பு சிக்குன் குனியாவுக்கு 150 பேர் பலியானதாக கூறினேன்.அதற்குப் பதில் அளித்த அமைச்சர் ஆற்கர்டு வீராசாமி அப்படி இல்லை, 150 பேர்பலியாகி விட்டதாக இருந்தால் அவர்களின் பெயர் பட்டியலை வெளியிட முடியுமாஎன்றார்.
நானும் அவரது சவாலை ஏற்றுக் கொண்டேன். நான் விவரம் சேகரித்தபோது 232 பேர்சிக்குன் குனியாவுக்கு இறந்திருப்பது தெரிய வந்தது. அவர்களின் பெயர், விலாசத்தைநான் வெளியிட்டேன். காலையில் அறிக்கை வெளியிட்ட பிறகு மேலும் 6 பேர்இறந்ததாக தகவல் கிடைத்தது.
லட்சக்கணக்கான மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். ஆனால் நான் பட்டியல்வெளியிட்ட பிறகும் கூட இல்லை என்கிறார்கள்.
சிக்குன் குனியா விஷயத்தில் படு மெத்தனமாக இருந்து விட்டது திமுக அரசு. இதைமக்களிடம் எடுத்துச் சொல்வோம். தொடர்ந்து ஒவ்வொரு விஷயத்திலும் மக்களைஏமாற்றி வருகிறார்கள்.
துணை நகரப் பிரச்சினையிலிருந்து 44 கிராம மக்களை எங்களால் காப்பாற்றமுடிந்தது. என்.எல்.சி. பிரச்சினையில் மத்திய அரசின் தவறான முடிவை திமுகஅங்கீகரித்தது. பிறகு எனது முயற்சியினால் அதை வாபஸ் பெற்றனர்.
புதிய பேருந்துகளை மக்கள் பயன்பாட்டுக்கு விடப் போவதாக கூறினர். ஆனால்பழைய பேருந்துகளுக்கு வர்ணம் பூசி விட்டுள்ளனர். இலவச டிவியைதிமுகவினருக்கே வழங்குகிறார்கள். 100 குடும்பங்கள் இருந்தால், 60 முதல் 65குடும்பங்களுக்கே வழங்குகிறார்கள்.
கொடுக்கப்பட்ட டிவிகளும் ஒழுங்காக இல்லை. படமே பார்க்க இயலவில்லையாம்.விலை உயர்ந்த வெளிநாட்டு டிவிக்களை பணக்காரர்கள் வைத்திருந்தாலும்ஸ்டெபிலைசர் வைத்திருப்பார்கள். தகுந்த கருவிகளை பொருத்தினால்தான் அவைமின்னல் தாக்குதல்களை தாங்கும்.
மின்னல் தாக்குவதிலிருந்து பாதுகாக்க சென்சார் என்ற கருவியைபொருத்தியிருப்பார்கள். அந்த கருவியின் விலை ரூ. 6,000. அப்படிப்பட்டகருவியை டிவியில் பொருத்தியா கொடுக்கிறீர்கள்? வெறும் டப்பா பெட்டியைத்தான்கொடுக்கிறார்கள்.
இந்த டிவிகள் இன்னும் 10 நாள் வேலை செய்தாலே அதிகம்தான். கிராமங்களில்வயல் வெளிகளில் இருக்கும் வீடுகளில் ஒருமுறை மின்னல் தாக்கினால் போதும்.இப்போதே பல டிவி பெட்டிகளில் விளக்கு மட்டுமே எரிவதாக சொல்கிறார்கள். சிலஇடங்களில் அதுவும் இல்லை.
முதலில் 2 ஏக்கர் நிலம் என்றார்கள். இப்போது அது மாறி பல குட்டி கர்ணங்கள்அடித்து உருமாறி விட்டது. ஒரு ஏக்கராகவும் இருக்கலாம், 50 சென்ட் ஆகவும்இருக்கலாம், 30 சென்ட் ஆகவும் இருக்கலாம் என்கிறார்கள். மக்களை ஏமாளிகள்என்று நினைக்கிறார்கள்.
பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இப்போது ஒரு குடும்பத்தின் தனி லாபத்துக்காகதன்னாட்சி அமைப்பாக மாற்றப் பார்ப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. இப்படிஎத்தனையோ மக்கள் விரோத செயல்கள் நடக்கின்றன. இதையெல்லாம் மக்களிடம்சொல்லி உள்ளாட்சித் தேர்தலில் ஆதரவு கேட்போம்.
உள்ளாட்சி தேர்தலிலும் கட்சித் தாவல் தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.முன்பு மேயர்கள், நகராட்சித் தலைவர்களே மக்களே நேரடியாக தேர்ந்தெடுத்தனர்.ஆனால் இப்போது அதை மாற்றி விட்டனர். இதை கேட்டால், எம்.எல்.ஏக்களைமக்கள் தேர்வு செய்கிறார்கள், முதல்வரை எம்.எல்.ஏக்கள்தானே தேர்வு செய்கிறார்கள்என்கிறார்கள்.
எம்.பிக்களுக்கும், எம்.எல்.ஏக்களுக்கும் கட்சித் தாவல் தடை சட்டம் உள்ளது. அந்தசட்டம் தெளிவாக உள்ளது. அதில் எந்த ஓட்டையும் இல்லை. ஆனால் உள்ளாட்சித்தேர்தலில் கட்சித் தாவல் தடை சட்டம் இல்லை. எந்தக் கவுன்சிலரும் எப்போதுவேண்டுமானாலும் மாறலாம்.
இதை பயன்படுத்திக் கொள்ளவே முக்கியமான தலைமைப் பதவிகளுக்கு மக்களேநேரடிாயக ஓட்டுப் போடும் முறையை ரத்து செய்து விட்டனர்.
எனவே உள்ளாட்சி அமைப்புகளிலும் கட்சித் தாவல் தடை சட்டம் கொண்டு வரப்படவேண்டும். நேரடிாயக மேயரை மக்களே தேர்வு செய்வதாக இருந்தால் அதிமுகவெற்றி பெற்று விடும் என்பதால்தான் அந்த முறையை மாற்றி விட்டனர்.
ஒரு முதல்வருக்கு தினசரி 250லிருந்து 500 கோப்புகள் வரை வரும். அப்படிப்பார்த்தால் கடந்த ஐந்து ஆண்டுகளில் எனது ஆட்சியில் கிட்டத்தட்ட 60,000கோப்புகள் எனது பார்வைக்கு வந்துள்ளன. அவற்றைப் பார்த்து நான் உரியஆணைகளை பிறப்பித்துள்ளேன். அதனால்தான் மக்கள் நலப்பணிகளும்,பொதுப்பணிகளும் நிறைவேற்றப்பட்டன என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications