வேட்பாளர் தேர்வுக்கு குழுக்கள்: திமுக கூட்டணி முடிவு
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தவும், தேர்தல் பிரசாரம் மற்றும் பணிகளை மேற்கொள்ளவும்மாநில மற்றும் மாவட்ட வாரியாக தோழமைக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுக்களை அமைக்கஜனநாயக முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தல் மற்றும் மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க ஜனநாயகமுற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களின் ஆலோசைனக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்றுமாலை நடந்தது.கூட்டத்திற்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார். பாமக நிறுவனர் ராமதாஸ், ஜி.கே.மணி, காங்கிரஸ்தலைவர் கிருஷ்ணசாமி, டி.சுதர்சனம், மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர்தா.பாண்டியன், மத்திய குழு உறுப்பினர் நல்லகண்ணு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொஹைதீன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
உள்ளாட்சித் தேர்தலில் தோழமைக் கட்சிகள், வேட்பாளர்களை நிறுத்தவும், தேர்தல் பிரசாரம், பணிகள்ஆகியவற்றில் ஈடுபடவும் ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் மாநில அளவிலான குழுக்களை அமைக்கவும்,மாவட்ட அளவிலான தேர்தல் குழுக்களை அமைக்கவும் அவற்றுடன் தொடர்பு கொண்டு செயல்படவும், இன்றுமுதல் இப்பணியை தொடர்வதென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின் ஐந்து ஆண்டு காலத்தில் ஆயிரக்கணக்கான கோப்புகள் கையெழுத்துப் போடாமல்தேங்கிக் கிடந்தன. கடந்த அதிமுக ஆட்சி எவ்வாறு பொறுப்பற்ற தன்மையுடன் அரசு நிர்வாகத்தை நடத்தியதுஎன்பதை மக்கள் அறியும் வகையில் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
சிக்குன் குனியா நோயை ஒழிக்க விழிப்புணர்வை உருவாக்கும் வகையில், மாநில அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை எடுக்கும் முயற்சிகளுக்கு துணையாக மக்கள் பிரதிநிதிகளும், தொண்டுள்ளம் கொண்ட நிறுவனங்களும்,தொழிலாளர்களும், கல்வி நிறுவனங்களும் மற்றும் அனைத்துப் பிரிவினரும் பங்கேற்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கேரள அரசுபுதிய சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது வருத்தம் தருகிறது. இரு மாநில மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு கேரள அரசு, உச்சநீதிமன்றத்தின் ஆணையை முறையாக அமல்படுத்துவதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆற்காடு வீராசாமி தலைமையில் குழு:
கூட்டணிக் கட்சிகளுடன் இட ஒதுக்கீடு தொடர்பாக பேசுவதற்காக அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமையில்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் வீரபாண்டி ஆறுமுகம், டி.ஆர்.பாலு, பொன்முடி, ராஜா, விடுதலை விரும்பி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பன்னீர் தலைமையில் 9 பேர் அதிமுக குழு:
இதற்கிடையே, முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை கட்சியின்பொதுச் செயலாளர் ஜெயலலிதா அமைத்துள்ளார்.
இடப் பங்கீடு தொடர்பாக தோழமைக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.இக்குழுவுக்கு ஓ.பன்னீர் செல்வம் தலைவராக இருப்பார். மேலும், செங்கோட்டையன், ஜெயக்குமார், மதுசூதனன்,சுலோச்சனா சம்பத், தளவாய் சுந்தரம், பாலகங்கா, எஸ்.கருப்பசாமி, பதர் சயீத் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்றும், நாளையும் தங்களது விண்ணப்பங்களை வழங்கலாம்எனவும் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சென்னை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தலைமைக்கழக அலுவலகத்திலும், மற்ற உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட விரும்புவோர், மாவட்டஅலுவலகங்களிலும் கொடுக்கலாம் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் ரூ. 5000 கொடுத்தும், நகராட்சி கவுன்சிலர்பதவிக்கு ரூ. 1500 கொடுத்தும், பேரூராட்சி கவுன்சிலருக்கு ரூ. 500 கொடுத்தும், ஊராட்சி குழு உறுப்பினர்பதவிக்கு ரூ. 2500 கொடுத்தும், ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு ரூ. 1500 கொடுத்தும் விண்ணப்பங்களைப்பெறலாம் என தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications