முதன்முதலாய்.. சென்னையில் உலக வங்கி கிளை/ஞ>

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் உலக வங்கி தனது அலுவலக கிளையைத் திறந்துள்ளது. டெல்லிக்கு வெளியே அமைந்துள்ள ஒரேஉலக வங்கிக் கிளை இது தான்.

உலகில் எந்த நாட்டிலும் அதன் தலைநகருக்கு வெளியே உலக வங்கியின் கிளை அமைக்கப்பட்டதே இல்லை.சென்னையில் கிளையை தொடங்கியுள்ளதன் மூலம் உலக வங்கியின் திட்டங்களில் சென்னையின் வர்த்தகமுக்கியத்துவம் உலகறியச் செய்யப்பட்டுள்ளது.

தரமணியில் உள்ள டைடல் பூங்காவில் இந்தக் கிளை தொடங்கப்பட்டுள்ளது.முதல்வர் கருணாநிதி இதனை திறந்து வைத்தார்.

இந் நிகழ்ச்சியில் உலக வங்கியின் முதன்மை நிதி அலுவலர் லாவியா, துணைத்தலைவர் செளத்ரி, இயக்குனர் மெக்டோனாக், நிதியமைச்சர் அன்பழகன், தலைமைச்செயலர் திரிபாதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிய கட்டடத்தை திறந்து வைத்து முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

தமிழகத்தில் நகர்ப்புற மேம்பாடு, குடிநீர் வினியோகம், உள்கட்டமைப்பு மற்றும்பாசனத் திட்டங்களுக்கு உலக வங்கி முக்கிய உதவிகளை செய்துள்ளது. தற்போதுதமிழகத்தில் உலக வங்கியின் நிதியுதவியுடன் ஐந்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன.

இதன் மொத்த மதிப்பு ரூ. 7,211 கோடி. நெடுஞ்சாலைகள், சுகாதாரம், நகர்ப்புறவளர்ச்சி, ஊரக வறுமை ஒழிப்பு மற்றும் சுனாமி நிவாரணம் ஆகிய பணிகள்மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும் பல திட்டங்களும் பரிசீலனையில் உள்ளன. உலக வங்கி திட்டங்களைவெற்றிகரமாக செயல்படுத்துவதில் தமிழகம் சாதனை படைத்துள்ளது.

தனது அலுவலகத்தை சென்னையில் அமைக்கும் முடிவை நான் கடந்த முறைமுதல்வராக இருந்த போது தான் உலக வங்கி எடுத்தது. அதற்கு முன்பாக பலநாடுகளில் பல்வேறு நகரங்களை உலக வங்கி ஆய்வு செய்தது. இறுதியில் சென்னைவென்றது.

உலகிலேயே நாட்டின் தலைநகருக்கு வெளியே உலக வங்கியின் அலுவலகம்அமைக்கப்பட்டிருப்பது இங்கு மட்டும் தான்.

கடந்த 2001ம் ஆண்டு ஏப்ரலில் இந்த அலுவலகத்தை அமைக்க மத்திய அரசுடன்ஒப்பந்தம் செய்த பின் உலக வங்கியின் துணைத் தலைவர் செளத்ரி மற்றும்அதிகாரிகள் தமிழகத்துக்கு வந்தனர்.

அப்போது தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்தது. இந்தமுயற்சி தற்போது வெற்றி பெற்றுள்ளது. வாஷிங்டனுக்கு பதிலாக சென்னையைஅடிப்படையாக கொண்டு முக்கிய திட்டங்களை உலக வங்கி மேற்கொள்ளதிட்டமிட்டுள்ளது பெரும் மகிழ்ச்சி தருகிறது.

இது தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே பெருமையை தந்துள்ளது.

உலக வங்கியைப் போலவே ஐ.நா. சபையும் தனது பணிகளை மற்ற இடங்களில்திறம்பட செயல்படுத்தும் வகையில் கிளைகளைத் தொடங்கலாம் என்று ஐ.நா.பொதுச் செயலாளர் கோபி அன்னான் கருத்து தெரிவித்துள்ளார். இது ஒரு நல்லமாற்றத்தின் தொடக்கம் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+