அதிமுக எம்எல்ஏ சண்முகத்துக்கு கொலை மிரட்டல்
மதுரை:
அதிமுகவில் இருந்து கொண்டே திமுகவை ஆதரித்து வரும் எம்எல்ஏ சண்முகத்துக்கு கொலை மிரட்டல்வந்துள்ளது.
மதுரை மேற்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏ சண்முகம் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலினை பாராட்டியகையோடு திமுக பக்கமாக சாய்ந்துவிட்டார். இதைத் தொடர்ந்து அவரை ஜெயலலிதா பேரவை மாநில்துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா.இந்த நிலையில் சென்னை சென்ற எஸ்.வி.சண்முகம் உடல்நிலை பாதிக்கப்பட்டு ராமச்சந்திரா மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே அவரது செல்போனில் பேசிய 2 பேர், அதிமுக தலைமையைவிமர்சிப்பதை நிறுத்தாவிட்டால், உன்னை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்ததாகக்கூறப்படுகிறது.
இதுகுறித்து சண்முகம் மதுரை நகர போலீஸ் கமிஷனருக்கு போனில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். இதுகுறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
போலீசார் விசாரித்தபோது மதுரை கரிமோடு பகுதியில் உள்ள ஒரு ரூபாய் காயின் போனில் இருந்து இந்தமிரட்டல் வந்தது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் கரிமேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர், மற்றும் அதிமுகமாவட்ட நிர்வாகி ஆகியோர் சிக்கினர். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் போலீசார் அவர்களை பிடித்துசென்றனர்.
இதற்கு அந்தப் பகுதியை சேர்ந்த அதிமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்து மதுரை புது சிறைச்சாலை ரோட்டில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் எச்சரித்து கலைந்து போகச் செய்தனர்.
பின்னர், பிடிபட்ட 2 பேரிடமும் விசாரணை நடத்திவிட்டு அவர்களை போலீசார் விடுவித்துவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications