பிளாட்-டியூஎல்ப் எம்பிக்களுக்கு இந்தியா அழைப்பு
கொழும்பு:
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ்க் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்பிக்களை பிரதமர் மன்மோகன் சிங்சந்திக்க மறுத்த நிலையில், தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி (டியுஎல்எப்), தமிழ் ஈழ மக்கள் விடுதலைஅமைப்பு (பிளாட்), ஈழ மக்கள் புரச்சிகர விடுதலை முன்னணி (இபிஆர்எல்எப்-வரதன் பிரிவு) ஆகியகட்சிகளைச் சேர்ந்த எம்பிக்களை டெல்லிக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கை எம்பி சம்பந்தன் ராஜவர்தன் தலைமையிலான தமிழ்க் கூட்டமைப்பைச் சேர்ந்த 6 எம்பிக்கள் இந்தியாவந்தனர். இவர்கள் டெல்லியில் ததசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத்துறை இணைஅமைச்சர் அகமது ஆகியோரை சந்தித்து பேசினர். ஆனால் அவர்களை பிரதமர் கடைசி நேரத்தில் சந்திக்கமறுத்துவிட்டார்.இந் நிலையில் டெல்லி வருமாறு தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி (டியுஎல்எப்), தமிழ் ஈழ மக்கள் விடுதலைஅமைப்பு (பிளாட்), ஈழ மக்கள் புரச்சிகர விடுதலை முன்னணி (இபிஆர்எல்எப்-வரதன் பிரிவு) ஆகியகட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு அனுப்பியுள்ளது.
இது குறித்து பிளாட் இயக்கத்தினர் கூறுகையில், நாங்கள் இந்த வாரம் டெல்லி செல்கிறோம். அங்கு நாங்கள்யாரை சந்திக்க போகிறோம் என்பது எங்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்றனர்.
தமிழர் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி ஜனதா விமுக்தி பெரமுனா, ஜதிகா ஹெலா உருமையா ஆகிய சிங்களகட்சி தலைவர்களுடனும் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிளாட் இயக்கம் மத்தியஅரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
புலிகள் ஆதரவு எம்பிக்களை மட்டும் மத்திய இணையமைச்சரும் நாராயணனும் சந்தித்தது சரியில்லை என்றுஎதிர்ப்பு கிளம்பியுள்ளதால் பிற இயக்கத்தைச் சேர்ந்த எம்பிக்களையும் இவர்கள் சந்திக்க முடிவு செய்ததாகத்தெரிகிறது.
திருமாவளவன் கோரிக்கை:
இதற்கிடையே விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சென்னையில் இன்று நிருபர்களிடம்பேசுகையில்,
தமிழ் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்பிக்களை பிரதமர் மன்மோகன் சிங் சந்திக்காதது கண்டனத்துக்குரியது. பெரும்முயற்சிகளுக்குப் பின் அவர்களால் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனைத் தான் சந்திக்க முடிந்தது.அவர்களுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும். அவர்கள் ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள். அவர்களுக்குத்தான் இலங்கையின் முழு விவகாரமும் தெரியும்.
சிங்கள தலைவர்களான சந்திரிகா, ரணில், ராஜபக்ஷேவுடன் மட்டும் பேச்சு நடத்தும் இந்தியா ஈழத் தமிழ்எம்பிக்களை மட்டும் புறக்கணிப்பது ஏன்?
டியுஎல்எப், பிளாட், இபிஆர்எல்எப்-வரதன் பிரிவு போன்ற கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்களை டெல்லிக்குவருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்திருப்பது எதற்கு என்று தெரியவில்லை. இந்த அமைப்புகள் இப்போதுசெயல்பாட்டிலேயே இல்லை. இலங்கையில் நடப்பது ஏதும் இவர்களுக்கு முழுமையாகத் தெரியாது என்றார்.
முன்னதாக தமிழன் டிவி நிறுவனர் கலைக்கோட்டுதயம், திருமா முன்னிலையில் விடுதலைச் சிறுத்தைகள்கட்சியில் இணைந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications